twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்காந்தை தவறாக கூட்டணியில் சேர்த்துவிட்டனர்-வடிவேலு

    By Chakra
    |

    மதுரை: விஜய்காந்தை தவறாக அதிமுக கூட்டணியில் சேர்த்துவிட்டனர் என்று நடிகர் வடிவேலு கூறினார்.

    மதுரையில் நிருபர்களிடம் பேசிய வடிவேலு,

    முதல்வர் கருணாநிதியின் நலத் திட்டங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன. சொன்னதையும் செய்கிறார், சொல்லாததையும் செய்கிறார். நான் ஏழையாக இருந்து கஷ்டப்பட்டவன். ஏழைகளின் கஷ்டம் எனக்கு புரியும்.

    திமுகவின் போர்ப்படைத் தளபதிகளாக மு.க.அழகிரியும், மு.க.ஸ்டாலினும் இருக்கிறார்கள். வலுவான கூட்டணியால் திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும். 58 வயதானவர்களுக்கு இலவச பஸ் பாஸ், ஏழை மாணவர்களுக்கு லேப்டாப், ஓட்டுரிமையில்லா சிசுக்களுக்குக் கூட (கர்ப்பிணி பெண்களுக்கு உதவி) மாதம் ரூ.1000... இப்படி எண்ணற்ற திட்டங்களை சொல்லலாம்.

    மதுரையில் இருக்கும் என்னுடைய தாயாரை சந்தித்து, அவரிடம் திருநீறு வாங்குவதற்காக வந்தேன். ஏப்ரல் 1ம் தேதி முதல் தென் மாவட்டம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு சொந்த, பந்தங்களிடம் பிரசாரம் செய்வேன்.

    திருவாரூரில் நான் பிரசாரம் செய்யும்போது, விஜயகாந்த் பற்றி நான் தப்பாக எதுவும் பேசவில்லை. ஆனால் தப்பு, தப்பா பீல் பண்றாங்க.. என்ன பண்றது. விஜய்காந்த் தனது வேட்பாளரை அடிக்கிறார். பாவம், அது யாரு பெத்த புள்ளையோ. தண்ணியப் போட்டு வந்துட்டா அடிப்பியா?.

    விஜய்காந்துக்கு தலைவராகும் தகுதியில்லை. அந்த கட்சியில் உள்ள தொண்டர்கள் நல்லவர்கள். முதல்வர் கருணாநிதிக்கு எதிராக கோஷம் போடுபவர்களுக்கு கூட, அவரது இலவச திட்டங்கள் போய்ச் சேருகின்றன.

    சினிமா வாய்ப்பு இல்லாத விஜயகாந்த் கட்சி ஆரம்பித்துள்ளார். அவரது பக்கத்து வீட்டில் இருந்தபோது, அவரை வருங்கால முதல்வர் என்று அழைக்கச் சொன்னார்கள். அதற்கு மறுத்ததால் என்னை சிலர் தாக்கினர்.

    அந்தப் பிரச்சனைக்கே விஜயகாந்த்தால் தீர்வு காண முடியவில்லை. நாட்டு பிரச்சனைகளை இவர் எப்படி தீர்க்க முடியும்?. அவரை தவறாக கூட்டணியில் சேர்த்துவிட்டனர் என்றார்.

    முன்னதாக தேர்தல் கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்ட திமுக எம்பி ரித்தீஷ் குமாரை நடிகர் வடிவேலு சந்தித்து பேசினார்.

    இந் நிலையில் ரித்தீஷ், மதுரையில் தங்கியிருக்க வேண்டும், ராமநாதபுரத்துக்குள் நுழையக் கூடாது என்ற நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    English summary
    Vijaykanth was mistakenly taken into the alliance by ADMK chief Jayalalitha, said actor comedian Vadivelu in Madirai
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X