»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சினிமாவில் தம் அடிப்பதில் தப்பில்லை. காட்சிக்குத் தேவைப்பட்டால் அது மாதிரி நடிப்பதில் தப்பே இல்லைஎன்கிறார் விஜயகாந்த்.

ரஜினிகாந்த் உள்ளிட்டவர்கள் சினிமாவில் தம் அடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதால், இளைஞர்கள்கெடுகிறார்கள் என்று கூறுவது குறித்து தென்னவன் சூட்டிங்கில் கிரணுடன் கொஞ்சிக் கொண்டிருந்தவிஜயகாந்திடம் கேட்டபோது, தனது அடிக் குரலில் அவர் அளித்த கணீர் பதில்,

இது ஒரு பெரிய பிரச்சினையே இல்லை. சிவாஜி சார் கூட பல படங்களில் தம் அடிப்பது போலவும், மதுஅருந்துவது போலவும் நடித்துள்ளார்.

ஒளிவிளக்கு படத்தில் எம்.ஜி.ஆர். கூட மது அருந்துவது போலவும், அதனால் ஏற்படுகிற விளைவுகளையும் காட்டி நடித்துள்ளார்.

எனவே, காட்சிக்குத் தேவைப்பட்டால் அதுபோன்ற காட்சிகளில் நடிப்பதில் தவறில்லை. துச்சாதனன், திரவுபதியின்சேலையை உருவுவது குறித்து நமது பள்ளிப் பாடங்களில் படிக்கிறோம்.

அதைப் படிக்கும் பள்ளி மாணவன்கெட்டுப் போய் விடுவான் என்று யாராவது நினைக்கிறோமா?

எங்கெல்லாம் கெட்டது நடக்கிறதோ, அதை சரி செய்ய நல்லதும் நடக்கும் என்பதைக் காட்டவே அதுபோன்றகாட்சிகளை படங்களில் வைக்கிறார்கள். இதை தப்பு என்று சொல்ல முடியாது என்று புதிய தத்துவத்தையே எடுத்துவைத்தார் விஜயகாந்த்.

சர்வதேச திரைப்பட விழாவில் அன்பே சிவம்

டெல்லியில் நடைபெறவுள்ள சர்வதேச திரைப்பட விழாவில் தமிழ் சினிமாவிலிருந்து அன்பே சிவம் மற்றும்ஒருத்தி ஆகிய படங்கள் கலந்து கொள்ள உள்ளன.

வரும் நவம்பர் மாதம் இந்த சர்வதேச திரைப்பட விழா நடைபெறவுள்ளது.

ஒருத்தி படத்தை அம்ஷன் குமார் இயக்கியுள்ளார். இதில் கணேஷ்குமார் நடித்துள்ளார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil