»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

தமிழகம் முழுவதிலும் உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜயகாந்த் திடீர் என ஆலோசனைநடத்தியுள்ளார். அரசியலில் குதிப்பது குறித்து அவர் தீவிரமாகவே பேசியதாகத் தெரிகிறது.

விஜயகாந்த் கொஞ்ச காலமாகவே, அரசியலில் எப்போது வேண்டுமானாலும் நுழைவேன் என்று பகிரங்கமாகவேகூறி வருகிறார். ரசிகர் மன்றங்களையும் அரசியலில் புகுத்துவதற்காக கொடி, சின்னம் என பழக்கப்படுத்திவைத்துள்ளார்.

இந் நிலையில் நேற்று (திங்கள்கிழமை) சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள விஜயகாந்த்தின் கல்யாணமண்டபத்தில் தமிழக விஜயகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகிகளின் திடீர் கூட்டம் நடந்தது. பிற மாநலங்களில்(கர்நாடகம், ஆந்திரா, கேரளா) உள்ள ரசிகர் மன்ற நிர்வாகிகளும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கு அழைப்பு மிக ரகசியமாக அனுப்பப்பட்டது. கூட்டமாக வராமல் தனித்தனியே சென்னை வந்துசேரவும் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து சென்னையில் குவிந்த நிர்வாகிகள் நேற்று ரசிகர் மன்ற கரைவேட்டிகளுடன் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

1,500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் விஜயகாந்த் பேசினார். அரசியலில் நுழைவதுதொடர்பாக ஆலோசனை கூறுமாறு மன்ற நிர்வாகிகளை விஜயகாந்த் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து ரசிகர் மன்ற நிர்வாகிகள், தங்களது மாவட்ட நிலவரம், விஜயகாந்த்திற்கு உள்ள செல்வாக்கு,அரசியலில் குதித்தால் மக்கள் தரும் ஆதரவு எப்படி இருக்கும் என்பது உள்ளிட்டவற்றை விஜயகாந்த்திடம்விளக்கினர்.

கிட்டத்தட்ட அனைவருமே அரசியலில் குதிக்க இதுவே சரியான சந்தர்ப்பம் என்று விஜய்காந்திடம் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து விரைவில் இன்னொரு கூட்டத்தையும் நடத்துவதாக அவர்களிடம் விஜயகாந்த்உறுதியளித்தார்.

அவர் சினிமாவில் நுழைந்து 25 ஆண்டுகள் ஆவதையொட்டி பிரமாண்டமான ரசிகர் மன்ற மாநாட்டை விரைவில்நடத்தவுள்ளார். அப்போது, அரசியல் பிரவேசம் பற்றி வெளிப்படையாக அறிவிக்கவும் விஜயகாந்த்திட்டமிட்டுள்ளதாக கூட்டத்தில் பங்கேற்க ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறுகிறார்கள்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil