»   »  நடிப்பு கல்லூரி தொடங்கும் நடிகர் சங்கம்

நடிப்பு கல்லூரி தொடங்கும் நடிகர் சங்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்- நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஆகியோரது பெயர்களில் நடிப்புப் பயிற்சிக்கல்லூரியைத் தொடங்கப் போவதாக தமிழக நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

நடிகர் சங்க வளாகத்தில் பொங்கல் திருநாளையொட்டி, துணை நடிகர், நடிகையருக்கு இலவச வேட்டி, சேலைவழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயகாந்த் கூறுயிைல், எம்.ஜி.ஆர், சிவாஜி பெயரில் நடிப்புப் பயிற்சிக்கல்லூரியைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.

இது தொடர்பாக நானும், சரத்குமாரும் சேர்ந்து பேசிஆலோசித்துள்ளோம். விரைவில் நடிகர் சங்க கமிட்டிக் கூட்டத்தில் இத் திட்டம் வைக்கப்பட்டு ஒப்புதல்பெறப்படும். அதன் பின் இதற்கான பணிகள் தொடங்கும்.

நடிப்புப் பயிற்சிக் கல்லூரி, நடிகர் சங்க வளாகத்திலேயே செயல்படும்.இது தவிர புதிதாக 5 மாடிக் கட்டடம்ஒன்றைக் கட்டவும் முடிவு செய்துள்ளோம். இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன என்றார் விஜயகாந்த்.

நிகழ்ச்சியில் நடிகர்கள் சரத்குமார், நெப்போலியன், சத்யராஜ், கார்த்திக், ராதாரவி, மன்சூர் அலிகான், தியாகு,நடிகைகள் மனோரமா, குஷ்பு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நடிகர் சங்கத்திற்கு நடிகை குஷ்பு தங்கமுலாமிடப்பட்ட விநாயகர் சிலையை அன்பளிப்பாக வழங்கினார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil