»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர்களைத் தாக்கி வரும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமிக்கு எதிராக சாட்டையைச் சுழற்றியுள்ளார் விஜய்காந்த்.

ஜாதிக் கட்சிகளைத் தடை செய்ய வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். சேலத்தில் இன்று(வியாழக்கிழமை) நடந்த மிகப் பிரமாண்டமான கூட்டத்தில் விஜய்காந்த் பேசினார். சுமார் 1 லட்சம் பேர்திரண்டிருந்த சேலம் ராணிப்பேட்டை மைதானத்தில் பேசிய ஜாதிக் கட்சிகளை விட்டு விளாசினார் விஜய்காந்த்.

ஜாதிக் கட்சிகளை அரசு தடை செய்ய வேண்டும் என்று கோரிய அவர், இந்தக் கட்சிகள் மானுடத்திற்கேஎதிரானவை என்றார். மேலும், நான் சரியான நேரத்தில் கட்டாயம் அரசியலுக்கு வருவேன் என்றார். ஆனால்தனிக் கட்சி தொடங்குவாரா, அல்லது வேறு ஏதாவது கட்சியில் இணைவாரா என்பதை விளக்கவில்லை.

ரசிகர்களால் புரட்சி கலைஞர் என்று அழைக்கப்படும் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே முதல்வர் கனவுடன்வலம் வந்து கொண்டுள்ளார். முதல் கட்டமாக ரசிகர் மன்றங்களுக்கு கொடியை அறிமுகப்படுத்தினார்.

அரசியலுக்கு வரணும்னு நினைச்சா வந்து விடுவேன். இப்ப வர்றேன் அப்ப வர்றேன் என்று சொல்லிக்கிட்டு இருக்கமாட்டேன் என்று ஒரு மேடையில் ரஜினியைத் தாக்கிப் பேசினார். ஆனால், இவரும் ரஜினியின் பாணியில்அரசியலுக்கு வருவேன், வருவேன் என்று பேசிக் கொண்டே இருக்கிறார்.

சேலத்தில் விஜய்காந்தின் பேச்சைவிட எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியது அவருக்குக் கூடிய கூட்டம் தான்.சுமார் 1 லட்சம் பேர் மத்தியில் உரையாற்றிய அவர் ஜாதிக் கட்சிகளை போட்டு வாங்கினார். பா.ம.கவுக்குசெல்வாக்கு மிகுந்த சேலத்தில் வன்னியர்கள் பெரும்பான்மையாக வசிப்பது குறிப்பிடத்தகக்கது.

ரஜினிக்கு அடுத்தபடியாக தமிழகம் முழுவதும் இவருக்குத் தான் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்பதுகுறிப்பிடத்தக்கது. குறிப்பாக வட தமிழகத்தில் வன்னிய இளைஞர்கள் ரஜினிக்கு அடுத்தபடியாக விஜய்காந்துக்குகொடி பிடித்து வருவதை அறிந்து தான் சினிமாக்காரகளைத் தாக்க ஆரம்பித்தார் ராமதாஸ் என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் ராமதாசுக்கு செல்வாக்கு நிறைந்த பகுதியிலேயே ஜாதிக் கட்சிகளை விஜய்காந்த் தாக்கியுள்ளதுபுருவங்களை உயரச் செய்துள்ளது. விஜய்காந்தின் பேச்சுக்கு ராமதாசிடம் இருந்து நிச்சயம் அதிரடி பதில் வரும்.பெரிய மோதலின் ஒரு தொடக்கமாகவே இதைப் பார்க்க முடிகிறது.

ரமணாவைத் தவிர சமீப காலமாக விஜய்காந்துக்கு படங்கள் சரியாக ஓடவில்லை. இந் நிலையில் ரஜினியைப்போலவே, அவ்வப்போது ஏதாவது சொல்லி, பரபரப்பை ஏற்படுத்தி, தனது அடுத்த படத்தையாவது ஓட்ட வைக்கவிஜய்காந்த் முயல்கிறாரோ என்றும் சந்தேகிக்க எழுகிறது.

எப்படியோ விஜய்காந்தின் அடுத்த பட ரிலீசின்போது தியேட்டர்களுக்கு வெளியே பெரிய சினிமாகாத்திருக்கிறது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil