twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கஜேந்திராவுக்கு பாமக பச்சைக் கொடிவிஜயகாந்த்தின் கஜேந்திரா படத்தைத் திரையிட பாமக பச்சைக் கொடி காட்டி விட்டதாக அதன் தயாரிப்பாளர்வி.ஏ.துரை கூறியுள்ளார்.விஜயகாந்த் நடிக்க வி.ஏ.துரை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள படம் கஜேந்திரா. இடையில், பாமகவைவிமர்சித்து விஜயகாந்த் குரல் கொடுக்க, அவர்கள் பதிலுக்கு விஜய்காந்த் ரசிகர்களைத் தாக்க ஆரம்பித்ததோடு,படத்தை திரையிட விட மாட்டோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.இதனால் படம் தயாராகியும், அதை வினியோகஸ்தர்கள் வாங்கிய பின்னரும் வட தமிழகத்தில் பாமகவினருக்குபயந்து தியேட்டர் உரிமையாளர்கள் அதைத் திரையிட மறுத்துவிட்டனர்.மேலும், மொத்தமாக படப் பெட்டிகளையே தங்களிடம் கொடுத்து விடுமாறும் பாமக தரப்பு துரையைமிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் கஜேந்திரா வருமா, வராதா என்ற பெரிய கேள்விக்குறி எழ, நெறஞ்ச மனசுஎன்ற அடுத்த படத்தில் நடிக்கப் போய்விட்டார் விஜய்காந்த்.படம் தனது சொந்தத் தயாரிப்பாக இருந்திருந்தால், படம் ரிலீஸ் வரை அரசியல் பேசாமல் இருந்திருந்திருப்பார்,இதை நான் தயாரித்ததால், கஷ்ட-நஷ்டம் குறித்து கவலைப்படாமல் பாமகவினருடன் மோதி பிரச்சனையைஉருவாக்கிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டார் விஜய்காந்த் என்று துரை தரப்பு எரிச்சல்பட்டுக் கொண்டிருந்தது.இந் நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்தித்த துரை தனது பொருட் செலவு, கடன் பிரச்சனைகள்குறித்து எடுத்துச் சொல்ல, படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் பிரச்சனை தர மாட்டோம் என ராமதாஸ்உறுதியளித்துள்ளார்.இது தொடர்பாக துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் ராமதாஸை அவரது வீட்டிற்கு சென்றுசந்தித்தேன். அப்போது கஜேந்திரா படத்தை திரையிடுவதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.அதற்கு ராமதாஸ், படத்தைத் திரையிடுவதில் பாமக பிரச்சினை செய்யாது என்று உறுதியளித்தார்.படப்பெட்டிகளை கடத்துவது, திரையரங்க ஸ்கிரீன்களை கிழிப்பது உள்ளிட்ட செயல்களில் பாமகவினர் ஈடுபடமாட்டார்கள் என்றும், படத்தை பிரச்சினையின்றி வெளியிட உதவுவார்கள் என்றும் ராமதாஸ் உறுதிமொழிஅளித்தார்.ராமதாஸ் ஒரு சமூக நீதிப் போராளி. என் தரப்பிலிருந்து படத்திற்குப் பிரச்சினை வராது, தைரியமாக ரிலீஸ்செய்யலாம். முடிந்தால், எனது கட்சிக்காரர்களை படம் பார்க்குமாறு அறிவுறுத்துகிறேன் என்று ராமதாஸ் கூறினார்.இவ்வாறு துரை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.ரஜினிகாந்த்துக்கும், பாமக தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது, ரஜினியின் பாபா படம் படு அடிவாங்கியது. இதனால் வினியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். பின்னர் அந்த நஷ்டத்தை ரஜினிகாந்த்பணம் கொடுத்து ஓரளவு ச செய்தார்.பாபா படத்திற்குக் கிடைத்த அதே ரிசல்ட் தான் வட மாவட்டங்களில் கஜேந்திராவுக்கும் கிடைக்கும் என்பதால்படத்தை வாங்கினாலும் ரிலீஸ் செய்யாமல் வினியோகஸ்தர்கள் அமைதி காத்தார்கள். மேலும் திரையரங்கஉரிமையாளர்களும் ஒதுங்கினர்.இப்போது பாமகவின் மிரட்டல் முடிவுக்கு வந்துள்ளதால், கஜேந்திரா விரைவில் வெள்ளித் திரைக்கு வருகிறது.தனிக்கட்சி: லியாகத் அலி கான்இந் நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கி நடிகர் விஜயகாந்த் தனித்துபோட்டியிடுவார் என்று அவரது நெருங்கிய நண்பரும், இயக்குனரும் வசனகர்த்தாவுமான லியாகத் அலிகான்கூறினார்.தாராபுரத்தில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய லியாகத் பின்னர் நிருபர்களிடம்கூறியதாவது:விஜயகாந்த் அரசியலுக்கு வருவதை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விரும்புகின்றனர். வரும்சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் புதிய கட்சி தொடங்குவார். தனித்துப் போட்டியிடுவார். இப்போதே விஜயகாந்த்ரசிகர் மன்றங்கள் ஒரு அரசியல் கட்சி போன்றுதான் செயல்படுகின்றன.ரஜினி ரசிகர்களையும் நாங்கள் அரவணைத்து செல்வோம். பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களைவிட ஆயிரம்மடங்கு வீரத்துடனும், விவேகத்துடனும் விஜயகாந்த் ரசிகர்கள் இருக்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகமக்களின் பேராதரவுடன் விஜயகாந்த் தலைமையில் புதிய அரசு அமைவது உறுதி என்றார் லியாகத் அலிகான்கொஞ்சம் கூட சளைக்காமல்.விஜய்காந்த் பேட்டி:இதற்கிடையே பழனியில் நிருபர்களிடம் பேசிய விஜய்காந்த்,உடுமலைப்பேட்டையில் நடத்தப்பட்ட ரசிகர்கள் சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் ஏதுமில்லை.அதை பத்திரிக்கைகள் தான் பெரிதுபடுத்திவிட்டன. ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டேன் அவ்வளவு தான்.அரசியல் கட்சி தொடங்கும் சிந்தனையும் இப்போதைக்கு இல்லை. அதைப் பற்றி சிந்திக்கவும்இல்லை.கஜேந்திரா படத்துக்கு சிக்கல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டேன். படத்தை எப்போது ரிலீஸ் செய்வது என்பதை தயாரிப்பாளர் தான் முடிவுசெய்ய வேண்டும் என்றார்.அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாலேயே இப்படி குழப்புறீங்களே?.. இந்த ஒரு லாவகம் போதும்கேப்டன்.. அரசியலுக்கு வந்தா நிச்சயம் ஜெயிச்சுருவீங்க !

    By Staff
    |

    விஜயகாந்த்தின் கஜேந்திரா படத்தைத் திரையிட பாமக பச்சைக் கொடி காட்டி விட்டதாக அதன் தயாரிப்பாளர்வி.ஏ.துரை கூறியுள்ளார்.

    விஜயகாந்த் நடிக்க வி.ஏ.துரை பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள படம் கஜேந்திரா. இடையில், பாமகவைவிமர்சித்து விஜயகாந்த் குரல் கொடுக்க, அவர்கள் பதிலுக்கு விஜய்காந்த் ரசிகர்களைத் தாக்க ஆரம்பித்ததோடு,படத்தை திரையிட விட மாட்டோம் என்றும் மிரட்டல் விடுத்தனர்.

    இதனால் படம் தயாராகியும், அதை வினியோகஸ்தர்கள் வாங்கிய பின்னரும் வட தமிழகத்தில் பாமகவினருக்குபயந்து தியேட்டர் உரிமையாளர்கள் அதைத் திரையிட மறுத்துவிட்டனர்.

    மேலும், மொத்தமாக படப் பெட்டிகளையே தங்களிடம் கொடுத்து விடுமாறும் பாமக தரப்பு துரையைமிரட்டியதாகத் தெரிகிறது. இதனால் கஜேந்திரா வருமா, வராதா என்ற பெரிய கேள்விக்குறி எழ, நெறஞ்ச மனசுஎன்ற அடுத்த படத்தில் நடிக்கப் போய்விட்டார் விஜய்காந்த்.

    படம் தனது சொந்தத் தயாரிப்பாக இருந்திருந்தால், படம் ரிலீஸ் வரை அரசியல் பேசாமல் இருந்திருந்திருப்பார்,இதை நான் தயாரித்ததால், கஷ்ட-நஷ்டம் குறித்து கவலைப்படாமல் பாமகவினருடன் மோதி பிரச்சனையைஉருவாக்கிவிட்டு ஒதுங்கிக் கொண்டுவிட்டார் விஜய்காந்த் என்று துரை தரப்பு எரிச்சல்பட்டுக் கொண்டிருந்தது.

    இந் நிலையில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்தித்த துரை தனது பொருட் செலவு, கடன் பிரச்சனைகள்குறித்து எடுத்துச் சொல்ல, படத்தை ரிலீஸ் செய்ய நாங்கள் பிரச்சனை தர மாட்டோம் என ராமதாஸ்உறுதியளித்துள்ளார்.

    இது தொடர்பாக துரை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வாரம் ராமதாஸை அவரது வீட்டிற்கு சென்றுசந்தித்தேன். அப்போது கஜேந்திரா படத்தை திரையிடுவதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொண்டேன்.

    அதற்கு ராமதாஸ், படத்தைத் திரையிடுவதில் பாமக பிரச்சினை செய்யாது என்று உறுதியளித்தார்.படப்பெட்டிகளை கடத்துவது, திரையரங்க ஸ்கிரீன்களை கிழிப்பது உள்ளிட்ட செயல்களில் பாமகவினர் ஈடுபடமாட்டார்கள் என்றும், படத்தை பிரச்சினையின்றி வெளியிட உதவுவார்கள் என்றும் ராமதாஸ் உறுதிமொழிஅளித்தார்.

    ராமதாஸ் ஒரு சமூக நீதிப் போராளி. என் தரப்பிலிருந்து படத்திற்குப் பிரச்சினை வராது, தைரியமாக ரிலீஸ்செய்யலாம். முடிந்தால், எனது கட்சிக்காரர்களை படம் பார்க்குமாறு அறிவுறுத்துகிறேன் என்று ராமதாஸ் கூறினார்.

    இவ்வாறு துரை தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

    ரஜினிகாந்த்துக்கும், பாமக தரப்புக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டபோது, ரஜினியின் பாபா படம் படு அடிவாங்கியது. இதனால் வினியோகஸ்தர்கள் பெரும் நஷ்டத்தை சந்தித்தனர். பின்னர் அந்த நஷ்டத்தை ரஜினிகாந்த்பணம் கொடுத்து ஓரளவு ச செய்தார்.

    பாபா படத்திற்குக் கிடைத்த அதே ரிசல்ட் தான் வட மாவட்டங்களில் கஜேந்திராவுக்கும் கிடைக்கும் என்பதால்படத்தை வாங்கினாலும் ரிலீஸ் செய்யாமல் வினியோகஸ்தர்கள் அமைதி காத்தார்கள். மேலும் திரையரங்கஉரிமையாளர்களும் ஒதுங்கினர்.

    இப்போது பாமகவின் மிரட்டல் முடிவுக்கு வந்துள்ளதால், கஜேந்திரா விரைவில் வெள்ளித் திரைக்கு வருகிறது.

    தனிக்கட்சி: லியாகத் அலி கான்

    இந் நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் புதிய கட்சி ஒன்றைத் தொடங்கி நடிகர் விஜயகாந்த் தனித்துபோட்டியிடுவார் என்று அவரது நெருங்கிய நண்பரும், இயக்குனரும் வசனகர்த்தாவுமான லியாகத் அலிகான்கூறினார்.

    தாராபுரத்தில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய லியாகத் பின்னர் நிருபர்களிடம்கூறியதாவது:

    விஜயகாந்த் அரசியலுக்கு வருவதை ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் விரும்புகின்றனர். வரும்சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் புதிய கட்சி தொடங்குவார். தனித்துப் போட்டியிடுவார். இப்போதே விஜயகாந்த்ரசிகர் மன்றங்கள் ஒரு அரசியல் கட்சி போன்றுதான் செயல்படுகின்றன.

    ரஜினி ரசிகர்களையும் நாங்கள் அரவணைத்து செல்வோம். பாட்டாளி மக்கள் கட்சி தொண்டர்களைவிட ஆயிரம்மடங்கு வீரத்துடனும், விவேகத்துடனும் விஜயகாந்த் ரசிகர்கள் இருக்கிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழகமக்களின் பேராதரவுடன் விஜயகாந்த் தலைமையில் புதிய அரசு அமைவது உறுதி என்றார் லியாகத் அலிகான்கொஞ்சம் கூட சளைக்காமல்.

    விஜய்காந்த் பேட்டி:

    இதற்கிடையே பழனியில் நிருபர்களிடம் பேசிய விஜய்காந்த்,

    உடுமலைப்பேட்டையில் நடத்தப்பட்ட ரசிகர்கள் சந்திப்பில் அரசியல் முக்கியத்துவம் ஏதுமில்லை.அதை பத்திரிக்கைகள் தான் பெரிதுபடுத்திவிட்டன. ரசிகர்களுடன் போட்டோ எடுத்துக்கொண்டேன் அவ்வளவு தான்.

    அரசியல் கட்சி தொடங்கும் சிந்தனையும் இப்போதைக்கு இல்லை. அதைப் பற்றி சிந்திக்கவும்இல்லை.

    கஜேந்திரா படத்துக்கு சிக்கல் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. நான் படத்தை முடித்துக்கொடுத்துவிட்டேன். படத்தை எப்போது ரிலீஸ் செய்வது என்பதை தயாரிப்பாளர் தான் முடிவுசெய்ய வேண்டும் என்றார்.

    அரசியலுக்கு வர்றதுக்கு முன்னாலேயே இப்படி குழப்புறீங்களே?.. இந்த ஒரு லாவகம் போதும்கேப்டன்.. அரசியலுக்கு வந்தா நிச்சயம் ஜெயிச்சுருவீங்க !

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X