»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

காலம் வரும்போது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பேன் என்று நடிகர் விஜயகாந்த் மீண்டும் கூறியுள்ளார்.

அரசியலுக்கு வரப் போகிறேன், வரப் போகிறேன் என்று சமீப காலமாக கூறி வரும் விஜயகாந்த் இன்று தனதுஅரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என கூறப்பட்டது.

சென்னை அருகே குன்றத்தூரில் விஜயகாந்த் ரசிகர் மன்றம், டால்மியா ஹெர்பல் ஆராய்ச்சி நிறுவனம் இணைந்துஇலவச மருத்துவ முகாமை இன்று நடத்தின. தமிழகம் முழுவதும் இதுபோல முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

இதன் தொடக்க விழாவில் விஜயகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து அறிவிப்பார் என்று கூறப்பட்டதால்,செய்தியாளர்களும், புகைப்படக்காரர்களும் குவிந்துவிட்டனர்.

ஆனால் வழக்கம் போல சொதப்பினார் விஜயகாந்த். மருத்துவ முகாமை தொடங்கி வைத்து விஜயகாந்த்பேசுகையில், எம்.ஜி.ஆரின் ரசிகனான நான், அவரது குருவான அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்துஇந்தப் பணியை தொடங்குகிறேன். தமிழகம் முழுவதும் இதுபோன்ற முகாம்கள் நடத்தப்படவுள்ளன.

கிராமப் பெண்களை முக்கியமாக கருத்தில் கொண்டு இந்த முகாம்கள் நடத்தப்படவுள்ளன. இது அரசியலைகருத்தில் கொண்டு நடத்தப்படவில்லை. நீங்கள் எனக்குக் கொடுத்தீர்கள். அதை உங்களுக்கு இப்படித் திருப்பிக்கொடுக்கிறேன்.

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கட்டும், தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா,இயன்றதை செய்வோம் இயலாதோருக்கு. இந்த மூன்றும் எங்களது மன்றத்தின் அடிப்படைத் தத்துவம்.

தமிழைப் பற்றி நான் பேசுவதற்கு எனக்கு உரிமை உள்ளது. ஏனென்றால் நான் தமிழன். 20 வருஷமாக தமிழன்என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா என்று முழங்கி வருகிறேன்.

மக்கள் சேவை எனது ரத்தத்தில் ஊறிய ஒன்று. எனக்கு எதிரிகளே கிடையாது. நான் யார் சொத்தையும்எடுக்கவில்லை, எனது சொத்தை யாரும் எடுக்கவுமில்லை. மக்களுக்கு சேவை செய்ய முதல்வர் பதவியில்இருந்தால்தான் முடியும் என்றில்லை. அது அவசியமில்லை.

எனக்கு 2 ஆண் குழந்தைகள்தான். அவர்களுக்கு சொத்து சேர்க்க வேண்டிய அவசியமில்லை.

நான் அரசியலுக்கு வர வேண்டும் என எனது ரசிகர்கள் விரும்புகிறார்கள். காலம் வரும்போது இதுகுறித்துஅறிவிப்பேன். இடைக்காலத்தில் எனது மன்ற நிர்வாகிகளை சில அரசியல் கட்சியினர் விலை பேசினர். அவர்கள்விலை போக மாட்டார்கள். எங்களை யாரும் சீண்ட வேண்டாம். நாங்கள் சீண்டினால் தாங்க மாட்டீர்கள்.

அரசியல்வாதிகள் தரும் அன்பளிப்புகளைப் பெற்றுக் கொண்டு ஓட்டுப் போடுகிறார்கள் மக்கள். பிறகு தண்ணீர்வரவில்லை, ரோடு இல்லை என்று புலம்புகிறார்கள். முதலில் மக்கள் திருந்த வேண்டும். அவர்கள் திருந்தாமல்இருப்பதால்தான் அரசியல்வாதிகள் அவர்களை ஆட்டிப் படைக்கிறார்கள் என்ற ரீதியில் பேசினார் விஜயகாந்த்.

இந்த நிகழ்ச்சியில் விஜயகாந்த்தின் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீப் ஆகியோரும் வந்திருந்தனர்.

விஜயகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து வழக்கம் போல கருத்தையே தெரிவித்ததால் கூடியிருந்தஆயிரக்கணக்கான அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Read more about: chennai, tamil, vijaykanth, politics

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil