»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil
பிட்டுத் துணியில் வந்து பிரளயம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் "நச்" நமீதா, எட்டு முழ மடிசார் சேலையில் வந்து அதிர்ச்சி ஏற்படுத்தப் போகிறார்.

மடிசார் மாமியாக வந்து அசத்திய நாயகிகள் தமிழில் நிறைய. ஆனாலும் இன்னும் மனசுக்குள் ஒய்யாரமாக உட்கார்ந்து கொண்டிருப்பது என்னவோஸ்ரீதேவி தான். மீண்டும் கோகிலாவில் மடிசாரில் வந்து போன பாந்தம், அழகை இன்னும் அந்தக்கால "ரசிக மக்கா" மறந்திருக்க மாட்டார்கள்.

அவருக்குப் பிறகு நிறைய பேர் மடிசாரில் நடித்தாலும் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் மடிசாரின் மதிப்பை குறைக்கும்படி தான் அதை உடுத்தி நடித்தார்கள்.

இப்போதைய படங்களில் மடிசாரிலும் ஒரு கவர்ச்சியை இழையோட வைத்து ரசிகர்களை ஜொள்ளு விட வைக்க கோலிவுட் இயக்குனர்கள் தவறுவதில்லை.

நியூ படத்தில் கிரண் மடிசார் கட்டி வந்து பலரையும் கதி கலங்க வைத்தார். த்ரிஷா, சாமியில் மாமியாக வந்து சீயானை சீண்டிப்பார்த்தார். சிம்ரன் கூட சில பாடல் காட்சிகளில் மடிசாரில் வந்து, இடுப்பு அட்டாக் கொடுத்துள்ளார்.

அந்நியனில் சதாவும், மடிசார் மாமியாக வருகிறாராம்.

இப்போது இன்னொரு புதிய மாமி வந்துள்ளார். அவர்தான் நமீதா. இவர் எப்போதுமே தனக்கு உரிய டிரஸ்ஸைப் போடுவதேஇல்லை. தனக்கு 5 வயதில் எடுத்த ஷார்ட்ஸ், டிரவுசர்ஸ், டி-சர்ட்களைத்தான் கீழாடை மேலாடைகளாக அணிந்து நடித்துவருகிறார்.

அப்படிப்பட்டவர் எட்டு முழ மடிசார் சேலையில் வந்தால் எப்படியிருக்கும்.

ஆனாலும் அதிலும் ஒரு அசத்தல் அழகு இருக்குமாம். சொல்கிறார் தலைப்புச் செய்தி படத்தின் இயக்குனர் பத்ரி. இந்தப்படத்தில்தான் நமீதா இப்படி மாமியாக வரப் போகிறாராம்.

கதைப்படி அய்யராத்துப் பொண்ணாக நடிக்கிறார் நமீதா. இதனால் மடிசார் கட்டியே ஆக வேண்டிய நிர்ப்பந்தம்.

மடிசாரில் நடித்தாலும் இருக்கவே இருக்கே கனவு சீன்கள்.. பக்கத்து வீட்டுக் குழந்தையின் டிரஸ்ஸை போட்டுக் கொண்டு அசத்திடமாட்டார் அசத்தி...நம்ம நமீதா.

தலைப்புச் செய்தி ஒரு த்ரில்லர் சப்ஜெட்க்டாம். ஒரே மாதிரியான உருவம் கொண்ட இருவர். அவர்களில் ஒருவர் வாடகைக்கொலையாளி. இன்னொருவர் நல்லவர், வல்லவர். கொலைக் குற்றவாளியாக வருபவரால், நல்லவருக்கு ஏற்படும் சிக்கல்களைஎடுத்துக் கூறுவதுதான் தலைப்புச் செய்தி படத்தின் கதையாம்.

படத்தின் ஹீரோ வேறு யாருமல்ல, இயக்குனர் பத்ரியேதான். அவரே இரட்டை வேடத்தில் வந்து கலக்கப் போகிறாராம். அவருக்குஜோடியாக வருகிறாராம் நமீதா.

படத்தில் நமிதாவைத் தவிர மற்ற எல்லோருமே கிட்டத்தட்ட புதுமுகங்கள் தான். ஹீரோவாகும் பத்ரிக்கு சொந்த ஊர் பெங்களூர்.லெதர் எக்ஸ்போர்ட் செய்து கொண்டு அப்படியே அமெரிக்காவில் குடியேறியவர். சினிமா மீது தாகம் கொண்ட இவர்அமெரிக்காவில் நடிப்பில் ஒரு டிப்ளமோவும் வாங்கியிருக்கிறாராம். சில ஆங்கில படங்களில் டெக்னிகல் சைடில் உதவியாளராகபணியாற்றியிருக்கிறாராம்.

கொலை வழக்கில் போலீஸ்-சிபிஐ இடையே நடக்கும் மோதலை (ஹாலிவுட் படங்களில் எப்.பி.ஐக்கும் லோக்கல் போலீசுக்கும்நடக்கும் சண்டையை வைத்து எத்தனையோ கதை வந்துருச்சு.. தமிழில் இந்த அட்டெம்ப்ட் புதுசு தான்) வைத்து கதையைநகர்த்துகிறாராம்.

நமிதா எப்படி என்று கேட்டால், நல்ல ஒத்துழைப்பு கொடுக்கிறார் என்று சர்ட்டிபிகேட் கொடுக்கிறார் பத்ரி.

அது தான் நமக்கே தெரியுமே...

Read more about: namitha, talaipu seithi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil