கரூர் துயரம்.. அப்படியே உட்கார்ந்துட்டோம்.. விஜய் கொடுத்த ரியாக்‌ஷன் இதுதான்.. நண்பர் சொன்ன சீக்ரெட்

சென்னை: கரூருக்கு விஜய் சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விரைவில் கருர் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கவிருக்கிறார் விஜய். அதேசமயம் இத்தனை நாட்கள் அவர் அங்கு செல்லாமல் இருப்பதும் விமர்சனத்தையும் சந்தித்திருக்கிறது.

உங்கள் விஜய் நா வரேன் என்ற பெயரில் கரூருக்கு அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்ட விஜய் கால தாமதமாக அங்கு சென்றார். அதனால் கூட்டம் கட்டுகடங்காமல் கூடியது. அதில் சிக்கி 41 பேர் உயிரிழந்தார்கள். இத்தனை பேர் உயிரிழந்த சம்பவம் தெரியவந்தும் அங்கில்லாமல் சென்னைக்கு விஜய் விமானம் ஏறியது கண்டனத்தை சம்பாதித்தது. சென்னைக்கு வந்த அவர் இரங்கல் தெரிவித்து ஒரு ட்வீட் மட்டும் வெளியிட்டிருந்தார்.

வீடியோவும் மோசம்: இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜக சார்பில் எம்பிக்கள் குழுவும் கரூருக்கு வந்து சென்றது. நிலைமை கை மீறி போவதை உணர்ந்த விஜய் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவும் ஷூட்டிங் மோடில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையே கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

Vijay s friend reveals how he behaved during the Karur incident

கரூர் செல்லும் விஜய்: இதுவரை விஜய் கரூருக்கு செல்லவில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்பு அவர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் வீடியோ காலில் பேசி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இருப்பினும் அவர் நேரில் செல்லாததை அனைவருமே விமர்சிக்கிறார்கள். சமீபத்தில்தான் டிஜிபியிடம் கரூர் செல்வதற்கு அனுமதி கேட்டு தவெக சார்பில் மனு ஒன்றும் அளிக்கப்பட்டது. எனவே விரைவில் விஜய்யின் கரூர் விஜயத்தை எதிர்பார்க்கலாம்.

சஞ்சீவ் பேட்டி: இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நடிகருமான சஞ்சீவ் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில் பேசிய அவர், "கரூர் சம்பவம் நடந்தது 27ஆம் தேதி. எனது பிறந்தநாள் 28ஆம் தேதி வந்தது. பிறந்தநாளுக்காக என்னென்னெம்மோ பிளான்கள் எல்லாம் செய்து வைத்திருந்தோம். ஆனால் இந்த சம்பவத்தால் அவை அனைத்தையுமே கேன்சல் செய்துவிட்டு அப்படியே உட்கார்ந்துவிட்டோம்.

விஜய்யின் ரியாக்‌ஷன்: விஜய்யிடம் நான் Take Care Trust in God என்று கூறினேன். அவர் இந்த விஷயத்தால் ரொம்பவே ஹர்ட் ஆகியிருக்கிறார். யாராக இருந்தாலும் அப்படித்தான் இருக்கும். நம்முடைய கூட்டத்துக்கு வந்து இப்படி ஆகிவிட்டதே என்ற நினைப்பில் அவர் இருக்கிறார். ரொம்ப சோகமாக இருக்கும்போது நிறைய ஆறுதல் கூறினால் சில சமயங்களில் அவர்கள் கோபப்படவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே அதற்கு மேல் நான் எதுவும் பேசவில்லை" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X