பல தேசங்கள்.. துப்பாக்கி.. புல்லட்.. விஜய்சேதுபதியின் யாதும் ஊரே யாவரும் கேளிர் ஃபர்ஸ்ட் லுக்!
சென்னை: மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் பிறந்தநாள் பரிசாக யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது.
இயக்குநர் மோகன் ராஜா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் செல்வன் பிறந்தநாள்
சாதாரண துணை நடிகராக இருந்து படிப்படியாக சினிமாவில் முன்னுக்கு வந்து, சூப்பர் ஸ்டார் ஹீரோக்களும் வியந்து பார்க்கும் அளவுக்கு தனது நடிப்பால் உயர்ந்து நிற்கும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி இன்று தனது 42வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஹேப்பி பர்த்டே விஜய்சேதுபதி!

மிரட்டும் பவானி
இந்த பொங்கலுக்கு திரையரங்கில் மாஸ்டர் படத்தில் பவானியாக மிரட்டி வருகிறார் நடிகர் விஜய்சேதுபதி. நான் ஹீரோ ஆகிட்டேன், இனிமேல் ஹீரோவா மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் வில்லன், நண்பன், கேமியோ ரோல், கடவுள் ரோல் என எதை கொடுத்தாலும் நடிப்பையும் சினிமாவையும் கடவுளாய் மதிக்கும் விஜய்சேதுபதிக்கு என்றுமே வெற்றிகள் தொடரும்.
ஏகப்பட்ட குறியீடுகள்
இயக்குநர் வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்கத்தில் உருவாகி உள்ள யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது. இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து என ஏகப்பட்ட நாடுகளின் கொடிகளும், துப்பாக்கி, தோட்டா, பாஸ்போர்ட், கைரேகை, வான்டட் என ஏகப்பட்ட குறியீடுகளுடன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.

ஹீரோயின் யார்
யாதும் ஊரே யாவரும் கேளிர் படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக பேட்ட, எனை நோக்கிப் பாயும் தோட்டா, வந்தா ராஜாவாதான் வருவேன், ஒரு பக்க கதை உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை மேகா ஆகாஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். பேட்ட படத்தில் இருவரும் இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.

மோகன் ராஜாவுக்கு முக்கியத்துவம்
ஜெயம் படத்தில் தொடங்கி இயக்குநராக ஏகப்பட்ட சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் மோகன் ராஜா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், நடிகர் விவேக்கும் இந்த படத்தில் சிறப்பான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விரைவில் டிரைலர்
க/பெ. ரணசிங்கம் படத்தைப் போலவே இந்த படத்தின் கதையும் வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற வித்தியாசமான டைட்டிலில் விஜய்சேதுபதி நடித்துள்ள இந்த படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும், இந்த ஆண்டு தொடர்ந்து ஏகப்பட்ட விஜய்சேதுபதி படங்கள் ரிலீசாகும் என்பதும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











