Just In
- 28 min ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 59 min ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 2 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Finance
அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. !
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
நான் தான் ஹீரோ.. விஜய்சேதுபதி சொன்ன ட்விஸ்ட் ஸ்டோரி.. மாஸ்டர்ல என்ன சர்ப்ரைஸ்லாம் இருகப்போகுதோ?
சென்னை: மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் லேட்டா வந்தாலும், தீயாய் பல விஷயங்களை நடிகர் விஜய்சேதுபதி பேசி அனலை கிளப்பியுள்ளார்.
விக்ரம் வேதா, பேட்ட படங்களை தொடர்ந்து, மாஸ்டர் படத்திலும் நெகட்டிவ் ரோலில் நடிகர் விஜய்சேதுபதி நடித்துள்ளார்.
விஜய்க்கு வில்லனாக நடிக்க ஏன் சம்மதிச்சீங்கன்னு விஜய் கேட்டப்போ, உங்களை ரொம்ப பிடிக்குமுன்னு சொல்லி ஆஃப் பண்ணியிருக்கிறார்.

நான் தான் ஹீரோ
மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் விஜய்சேதுபதி, மாஸ்டர் படத்தில் நான் தான் ஹீரோ எனக் கூறி அரங்கத்தையே ஆச்சர்யப்பட வைத்தார். பின்னர், விஜய்க்கு நான் வில்லன்னா.. விஜய் எனக்கு வில்லன் தானே, அப்போ நான் ஹீரோ தானே எனக் கூறி சிரித்தார்.

நல்லா குடிச்சுட்டு
ஒரு நாள் நல்ல குடிச்சுட்டு, எங்கப்பாவ கண்டபடி திட்டுனேன். நான் நல்லா இல்லாத போதெல்லாம் கூட இருந்துட்டு, இப்போ ஏன் கூட இல்லாம போயிட்டியேன்னு, எனக்கு எப்பவுமே எங்கப்பா தான் மாஸ்டர் என்றும் தெறியாக பேசி ரசிகர்களின் கைதட்டல்களை பெற்றுள்ளார் மக்கள் செல்வன்.

விஜய் சார் பெருந்தன்மை
ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகுறதுக்கு முன்னாடி, கோபி பிரசன்னா மற்றும் மாஸ்டர் படக் குழுவிடம், என் பேரு பக்கத்துல விஜய்சேதுபதி பெயரும் வரணும்னு சொன்னாரு. இவ்ளோ பெரிய ஸ்டார் படத்துல, நடிக்கிறதே பெரிய விஷயம், இது என் படம் என்கிற கம்ஃபோர்ட் ஸோனை ஏற்படுத்தி கொடுத்தார் விஜய் சார் என்றார்.

ரொம்ப கவனிப்பாரு
நான் ரொம்ப பேசுவேன், ஆனா விஜய் அதிகமா பேசமாட்டாரு, ஏன்னு ஒரு நாள் கேட்டுட்டேன். பேசுறத விட அதிகமா கவனிச்சா, அதிகமா கத்துக்கலாம்னு சொன்னாரு என விஜய்சேதுபதி மனம் விட்டு பல விஷயங்களை மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பேசி அனைவரது மனங்களையும் கொள்ளை அடித்துள்ளார்.