»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகை விஜயசாந்தி புது கட்சி துவங்கி ஆந்திராவில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளார்.இதையடுத்து சினிமாவுக்கு அவர் முழுக்கு போடுகிறார்.

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன் கல்லுக்குள் ஈரம் மூலமாக சினிமாவுக்கு அறிமுகமானவர் விஜயசாந்தி. தமிழில்சான்ஸ்கள் இல்லாமல் போக தெலுங்குக்குப் போய் முன்னணி ஹீரோயின் ஆனார். அடிதடிப் படங்களின் மூலம்லேடி சூப்பர் ஸ்டாரானார்.

இடையிடேயை தமிழிலும் நடித்தார்.

திடீரென அரசியல் பேச ஆரம்பித்தார். பா.ஜ.கவில் சேர்ந்தார். ஆனால், முதல்வர் ஜெயலலிதாவின் தீவிரஆதரவாளராக மாறினார். கருணாநிதியைக் கண்டித்தும் ஜெயலலிதாவை வாழ்த்தியும் பேசுவதை வழக்கமாகக்கொண்டுள்ளார்.

பா.ஜ.கவில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அவர் அடுத்த ஆண்டு ஆந்திராவில நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலைமனதில் கொண்டு தனிக் கட்சி ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. தமிழைப் போலவே ஆந்திராவிலும்அரசியலில் சினிமாவின் தாக்கம் அதிகம் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil