ரஜினிகாந்த் போன் பண்ணி பாராட்டினார்.. செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி.. விக்னேஷ் சிவன் மகிழ்ச்சி!
சென்னை: செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சிக்கான அறிமுக பாடல் மற்றும் நேற்று நடைபெற்ற அறிமுக விழா கலை நிகழ்ச்சிகள் என அனைத்தையும் இயக்கியது இயக்குநர் விக்னேஷ் சிவன் தான்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
மேலும், நடிகர் ரஜினிகாந்த் தனக்கு போன் செய்து பாராட்டிய தகவலையும் கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.

முதலமைச்சர் நடித்த செஸ் பாடல்
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிருந்தா மாஸ்டர் நடன அசைவுகளை சொல்லிக் கொடுக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் மற்றும் நடிகை அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடித்த அட்டகாசமான செஸ் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது.

செஸ் ஒலிம்பியாட் கலை நிகழ்ச்சிகள்
அதுமட்டுமின்றி நேற்று பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்ட செஸ் ஒலிம்பியாட்டின் துவக்க விழா நிகழ்ச்சிகளையும் இயக்கியது இயக்குநர் விக்னேஷ் சிவன் தான். இந்நிலையில், பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

ரஜினி பாராட்டு
மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், நிகழ்ச்சி முடிந்து சென்றதும் உடனடியாக போனில் அழைத்து தன்னை பாராட்டியதையும் தெரிவித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன். நடிகர் ரஜினிகாந்தின் அருகிலேயே அமர்ந்திருந்த புகைப்படத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.
பாடல் மேக்கிங்
நடன இயக்குநர் பிருந்தா மாஸ்டர் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானை நடிக்க வைத்த பாடல் மேக்கிங் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இயக்குநர் விக்னேஷ் சிவன், ஏ.ஆர். ரஹ்மான், அதிதி ஷங்கர் உள்ளிட்டோருக்கு நன்றி கூறியுள்ளார்.

ரஜினி படம் இயக்குவாரா
நடிகர் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க உள்ள இயக்குநர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக ரஜினிகாந்தின் படத்தையும் இயக்குவாரா? என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்துக்கு சென்றும் மணமக்களை வாழ்த்தி இருந்தார் ரஜினிகாந்த்.


Click it and Unblock the Notifications











