விக்ரம் 100வது நாள் வெற்றி விழா... இதெல்லாம் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு… பெருமூச்சுவிட்ட ரசிகர்கள்!

சென்னை: கமல் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் கமலுடன் விஜய், சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில், கமலின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் படத்தின் 100வது நாள் வெற்றிவிழாவை படக்குழுவினர் கொண்டாடினர்.

விக்ரம் 100வது நாள்

விக்ரம் 100வது நாள்

கமல்ஹாசன் ஹீரோவாக நடித்த விக்ரம் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்தப் படத்தில் கமலுடன் விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில், சூர்யா, நரேன், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இதுவரை கமலின் திரைப்படங்கள் செய்யாத சாதனையை விக்ரம் நிறைவேற்றியது. பிரம்மாண்டமான மல்டி ஸ்டார்ஸ் படமாக வெளியான விக்ரம், ரசிகர்களிடம் தரமான வரவேற்பைப் பெற்றதோடு, திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து சாதனை படைத்தது.

விக்ரம் வெற்றிவிழா

விக்ரம் வெற்றிவிழா

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரித்த 'விக்ரம்' பாக்ஸ் ஆபிஸில் 400 கோடிக்கும் மேல் வசூலித்து கோலிவுட்டையே அதிர வைத்தது. தியேட்டர் டிக்கெட் விலை, ஓடிடி வரவுகள், வீடியோ பைரசி என இவ்வளவு சிக்கல்களையும் கடந்து திரையரங்குகளில் விக்ரம் 100 நாட்கள் ஓடியது மிகப் பெரிய சாதனை என சினிமா விமர்சகர்கள் பாராட்டினர். இதனையடுத்து விக்ரம் 100வது நாள் வெற்றி விழாவை படக்குழுவினர் சிறப்பாக கொண்டாடியுள்ளனர். கமலின் 68வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (நவ 6) கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், விக்ரம் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்க உரிமையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொண்டனர்.

விக்ரம் ஷீல்டு

விக்ரம் ஷீல்டு

விக்ரம் வெற்றிவிழாவில் பல சுவாரஸ்யங்கள் நடந்தேறின. முக்கியமாக இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் 'விக்ரம் 100வது நாள் ஷீல்டு' வழங்கப்பட்டது. இந்த ஷீல்டுகள் எல்லாமே, விக்ரம் பட போஸ்டரில் துப்பாக்கியுடன் கமல் எப்படி இருந்தாரோ, அதேபோல் உருவாக்கப்பட்டிருந்தது. விக்ரம் படத்தில் பணியாற்றியவர்கள் முதல் தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என அனைவருக்கும் இந்த ஷீல்டு வழங்கப்பட்டது. கமல், லோகேஷ் கனகராஜ் இதனை வழங்கினர்.

ரசிகர்கள் பெருமூச்சு

ரசிகர்கள் பெருமூச்சு

சுமார் 15 வருடங்களுக்கு முன்பு திரையரங்குகளில் 100 நாட்கள், 150 நாட்கள், 200 நாட்கள் ஓடும் படங்களுக்கு வெற்றிவிழா நடத்தி, ஷீல்டுகள் வழங்கப்படுவது நடைமுறையில் இருந்தது. ஆனால், கடந்த சில ஆண்டுகளாக அதற்கெல்லாம் வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டன. ஏனென்றால் இப்போது வெளியாகும் படங்கள் அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடுவது ரொம்பவே அரிதானது தான். இந்நிலையில், பல வருடங்களுக்குப் பிறகு, விக்ரம் படத்தின் 100வது நாள் ஷீல்டு வழங்கப்பட்டது, பழைய நினைவுகளை கண்முன்னே கொண்டு வந்துவிட்டதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X