twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஹேப்பி பர்த் டே சியான் விக்ரம்...விக்ரம் பற்றி இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா ?

    |

    சென்னை : நடிகர் விக்ரம் இன்று தனது 56 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதற்காக அவருக்கு ரசிகர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். விக்ரம் தற்போது நடித்து வரும் கோப்ரா படக்குழுவினர் நேற்றே ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு, விக்ரமின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை துவக்கி வைத்து விட்டனர்.

    விக்ரம், தமிழ் சினிமாவில் அர்ப்பணிப்பான நடிகர் என்பது அனைவருக்கும் தெரியும். இதைத் தாண்டி அவரை பற்றி பலரும் அறியாத பல சுவாரஸ்யமான விஷயங்களை அவரின் பர்த்டே ஸ்பெஷலாக இங்கு பார்க்கலாம்.

    பசுமை நாயகன்.. என்றும் பசுமரத்தாணி போல நினைவில் இருப்பார்.. விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலிபசுமை நாயகன்.. என்றும் பசுமரத்தாணி போல நினைவில் இருப்பார்.. விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

    சினிமாவிற்கு வந்தது எப்படி

    சினிமாவிற்கு வந்தது எப்படி

    1990 ம் ஆண்டு என் காதல் கண்மணி என்பது தான் விக்ரம் முதல் முதலாக நடித்த படம். இதைத் தொடர்ந்து தமிழ், மலையாளம், தெலுங்கில் 1990 களில் லோ பட்ஜெட் படங்கள் பலவற்றில் நடித்தார். ஆனால் இவற்றில் பல படங்கள் பெரிதாக கவனிக்கப்படவில்லை. கிட்டதட்ட 9 வருட போராட்டத்திற்கு பிறகு 1999 ம் ஆண்டு பாலா இயக்கத்தில் நடித்த சேது படம் தான் விக்ரம் வாழ்க்கையில் முதல் வெற்றியை கொடுத்தது. அதைத் தொடர்ந்து தில், தூள், ஜெமினி, சாமி என வரிசையாக விக்ரம் நடித்த படங்கள் ஹிட்டாக, தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவரானார்.

    சமூக பணியில் ஆர்வம்

    சமூக பணியில் ஆர்வம்

    விக்ரம் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பை 2016 ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார் விக்ரம். இதன் மூலம் பலருக்கும் பல உதவிகளை அவர் செய்து வருகிறார். 2016 ல் சென்னை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக flood relief anthem என்ற வீடியோவை தானே தயாரித்து, இயக்கினார். காசி கண் மருத்துவமனையில் ஒரு அங்கத்தினராக இருக்கும் விக்ரம், பல மருத்துவ உதவிகளையும் செய்து வருகிறார்.

    விக்ரம் பெயர் இப்படி தான் வந்ததா

    விக்ரம் பெயர் இப்படி தான் வந்ததா

    பரமக்குடியில் பிறந்த விக்ரம், அப்பா துணை நடிகராக இருந்ததால் சிறு வயதிலேயே நடிக்க வேண்டும் பல திறமைகளை வளர்த்துக் கொண்டார். விக்ரமின் அம்மா சப்-கலெக்டராக இருந்தவர். நடிகரும் இயக்குனருமான தியாகராஜன், விக்ரமின் சகோதரர். அவரது மகன் பிரசாந்த், விக்ரமின் உறவினர். விக்ரமின் உண்மையான பெயர் கென்னடி. ஆனால் அந்த பெயரை சினிமாவில் பயன்படுத்த விரும்பாத அவர், தனது அப்பா பெயரின் ஆரம்ப எழுத்தான Vi, கென்னடி என்பதிலிருந்து K, தனது அம்மா ராஜேஸ்வரி பெயரின் ஆரம்ப எழுத்தான Ra, ஜாதகத்தில் தனது நட்சத்திர பெயரில் இருந்து ram ஆகியவற்றை ஒன்றை இணைத்து விக்ரம் என பெயரை வைத்துள்ளார்.

    செம திறமைசாலி தான்

    செம திறமைசாலி தான்

    பள்ளியில் படிக்கும் போதே கராத்தே, குதிரையேற்றம், நீச்சல் ஆகியவற்றை கற்றுக் கொண்டார் விக்ரம். நடனம், நடிப்பு என பல திறமைகளை வளர்த்துக் கொண்டார். பள்ளி முடித்ததுமே நடிக்க வர வேண்டும் என விரும்பிய விக்ரமை அவரது அப்பா தான் கட்டாயப்படுத்தி பட்டப்படிப்பை லயோலா காலேஜில் படிக்க வைத்துள்ளார். எம்பிஏ.,வை பாதியிலேயே நிறுத்தி விட்டு நடிப்பில் தீவிரம் காட்ட துவங்கி விட்டார் விக்ரம்.

    யப்பா...என்ன ஒரு தன்னம்பிக்கை

    யப்பா...என்ன ஒரு தன்னம்பிக்கை

    கல்லூரியில் படிக்கும் போது, ஐஐடி மெட்ராசில் சிறந்த நடிகர் விருதினை வாங்கி விட்டு வீட்டிற்கு பைக்கில் திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் விக்ரமிற்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. 3 ஆண்டுகள் மருத்துவமனையிலேயே இருந்தார். அவர் மீண்டும் பழைய படி நடப்பதற்காக அவரது காலில் 33 சர்ஜரிகள் செய்யப்பட்டது. ஊன்றுகோலின் துணையுடனேயே சில காலம் நடந்து, கல்லூரி படிப்பை முடித்தார். ஆரம்பத்தில் மாடலாக விளம்பரங்களில் நடித்து, பிறகு சினிமாவிற்குள் நுழைந்தார்.

    விக்ரமின் திருமணம்

    விக்ரமின் திருமணம்

    1980 களின் கடைசியில் சைலஜா பாலகிருஷ்ணனை சந்தித்த விக்ரம், 1992 ல் அவரை திருமணம் செய்து கொண்டார். குருவாயூர் கோயிலில் 12 ஜோடிகளில் ஒருவராக விக்ரமின் திருமணம் நடைபெற்றது. பிறகு சென்னை லயோலா கல்லூரியில் கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடைபெற்றது. சைலஜா, சென்னையில் பள்ளி ஒன்றில் சைகாலஜி ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் தான் தெய்வ திருமகள் படத்தில் மனவளம் குன்றியவர்களை எப்படி நடத்த வேண்டும், அவர்களை எப்படி வளர்ச்சி பெற வைக்க முடியும் என்பதை சொல்லும் விதமாக விக்ரமின் கேரக்டர் எப்படி இருக்க வேண்டும் என அட்வைஸ் கொடுத்தவர்.

    பாடகரான விக்ரம்

    பாடகரான விக்ரம்

    2002 ம் ஆண்டு சூர்யா நடித்த ஸ்ரீ படத்தில், யாமிருக்க பயமேன் என்ற பாடலை பாடி பாடகராக அறிமுகமானார் விக்ரம். அதற்கு பிறகு ஜெமினி, கந்தசாமி, மதராசபட்டினம், தெய்வ திருமகள் போன்ற பல படங்களில் பாடல் பாடினார்.

    இதெல்லாம் தெரியாம போச்சே

    இதெல்லாம் தெரியாம போச்சே

    நடிகர், தயாரிப்பாளர், பாடகர் , டப்பிங் கலைஞர் என பல திறமைகளைக் கொண்ட விக்ரம், 55 க்கும் அதிகமான மோஷன் பிக்சர்களில் நடித்துள்ளார். 3 டிவி நிகழ்ச்சிகள், பல மியூசிக் வீடியோக்கள் ஆகியவற்றிலும் நடித்துள்ளார்.தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு சினிமாக்களிலும் விக்ரம் நடித்துள்ளார்.

    English summary
    Today, actor Vikram celebrates his 56th birthday. Fans and celebrities shared their birthday wishes for Vikram on social media. Yesterday, the Vikram starring Cobra team released a special poster to celebrate Vikram's birthday. The second single announcement about this movie will come today.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X