அடுத்த சம்பவம் ரெடி.. கோப்ரா படத்தின் புது போஸ்டர் .. கொண்டாடும் ரசிகர்கள் !
சென்னை : நடிகர் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் எக்ஸ்குளுசிவ் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி உள்ளத் திரைப்படம் கோப்ரா.
இப்படத்தில் சீயான் விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில், அவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், கே.எஸ். ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் படத்தின் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விறுவிறுப்பான படப்பிடிப்பு
செவன் ஸ்கிரீன்ஸ் சார்பில், தயாரிப்பாளர் லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்து வருகிறார். கோப்ரா திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிந்து. போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

கோப்ரா எக்ஸ்குளுசிவ் போஸ்டர்
இந்நிலையில் கோப்ரா படத்தின் எக்ஸ்குளுசிவ் போஸ்டரை படக்குழு சற்று முன் வெளியிட்டுள்ளது. வித்தியாசமான வெளியாகி உள்ள அந்த போஸ்டரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். பான் இந்திய படமாக வெளியாக உள்ள இத்திரைப்படம் ஆகஸ்ட் மாதம் 11ந் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள், சிங்கிள் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த படத்தில் விக்ரம் ஏழு விதமான கெட்டப்பில் விக்ரம் நடித்துள்ளார் இப்படத்தின் மீதான எதிர்ப்பு ஏகத்திற்கும் அதிகரித்துள்ளது.

தியேட்டர் ரிலீஸ் உரிமம்
கோப்ரா' படத்தின் யுகே மற்றும் ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது. இந்நிறுவனம் வலிமை, பீஸ்ட், விக்ரம் போன்ற படங்களை ரிலீஸ் செய்த நிறுவனமாகும். கோப்ரா படம் வெளியாகும் அதே தேதியில் அமீர் கான் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் லால் சிங் சத்தா மற்றும் அக்ஷய் குமார் நடிப்பில் ரக்ஷா பந்தன் ஆகிய இரு படங்களும் வெளியாக உள்ளன.

ஹாலிவுட் நடிகரை நினைவுபடுத்தினார்
விக்ரம் நடிப்பில் கடைசியாக மகான் திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்தில் தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்திருந்தார். அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான இப்படத்தில் சிம்ரன், பாபி சின்ஹா, வாணி போஜன் ,சனந்த் ஆகியோர் நடித்திருந்தனர். மது ஒழிப்பை பற்றி பேசிய இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படத்தில் சில காட்சிகளில் ஹாலிவுட் நடிகரை நினைவுப்படுத்தி மொத்த கதையையும் விக்ரம் தாங்கிபிடித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











