»   »  'சீயான்' விக்ரம் வீட்டில் கெட்டிமேளச் சத்தம்

'சீயான்' விக்ரம் வீட்டில் கெட்டிமேளச் சத்தம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதா-மனு ரஞ்சித் நிச்சயதார்த்தம், வருகின்ற ஜூலை மாதம் நடைபெறப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் விக்ரம். விக்ரம்-சைலஜா தம்பதியருக்கு துருவ் என்ற மகனும், அக்ஷிதா என்ற மகளும் உள்ளனர்.

Vikram Daughter Akshita Engagement

இந்நிலையில் விக்ரம் மகள் அக்ஷிதாவுக்கும், கவின்கேர் ரங்கநாதன் குடும்பத்தைச் சேர்ந்த மனு ரஞ்சித்திற்கும் வருகின்ற ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறப் போவதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது விக்ரம் வீட்டினர் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகளில் மும்முரமாக இறங்கியுள்ளனராம். ஜூலை 10 ம் தேதி நடைபெறும் நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

சென்னையில் உள்ள மிகப்பெரிய நட்சத்திர ஹோட்டலில் இந்த விழாவை நடத்திட இரு குடும்பத்தினரும் திட்டமிட்டுள்ளனராம். திருமணம் அடுத்த ஆண்டில் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விக்ரம் தற்போது இருமுகன் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Vikram Daughter Akshita-Manu Ranjit Engagement in July. But the Official Confirmation not yet be Released.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil