ரிலீசுக்கு முன்பே ஓடிடி அறிவிப்பும் வந்தாச்சு...விக்ரம் ஓடிடி ரிலீஸ் எப்போ தெரியுமா ?

சென்னை : கமல் நடித்துள்ள விக்ரம் படம் தியேட்டர்களில் ரிலீசாவதற்கு முன்பே ஓடிடி.,யில் ரிலீசாகும் விபரங்கள் வெளியாகி உள்ளது. இதனால் ரசிகர்கள் படத்தை பார்க்க செம ஆர்வமாக உள்ளனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. இந்த படம் பான் இந்தியா படமாக 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது. இதற்காக இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ப்ரொமோஷன் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் மலேசியாவில் நடைபெற உள்ள ப்ரொமோஷனில் சூர்யாவும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Vikram expected to release in ott on August

விக்ரம் படம் 2 மணி நேரம் 53 நிமிடங்கள் ரன்னிங் டைம் கொண்டுள்ளதாம். இந்த படத்திற்கு சென்சார் போர்டு யுஏ சான்று வழங்கி உள்ளது. இதை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ ஜுன் 3 ம் தேதி அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளது. படம் பற்றி தினமும் ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் மேலும் தூண்டி வருகிறது.

இதற்கிடையில் விக்ரம் படத்தை சட்ட விரோதமாக ஆன்லைனில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மனுத்தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள், விக்ரம் படத்தை சட்டவிரோதமாக ஆன்லைனில் வெளியிட நீதிமன்றமும் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜுன் மாதம் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட உள்ள விக்ரம் படம், அதனைத் தொடர்ந்து ஓடிடியில் ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. பட ரிலீசிற்கு பிறகு ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளது. விக்ரம் படத்தில் டிஜிட்டல் வெளியீட்டு உரிமத்தை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரும், சேட்டிலைட் ஒளிபரப்பு உரிமத்தை விஜய் டிவியும் மிகப் பெரிய தொகைக்கு வாங்கி உள்ளதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.

இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிக அதிகமான தொகைக்கு விக்ரம் படத்தின் டிஜிட்டல் மற்றும் சேட்டிலைட் உரிமம் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. விக்ரம் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கூட நேரடி ஒளிபரப்பு செய்யப்படாமல் ஒளிபரப்பு உரிமத்தை கூட விஜய் டிவி தான் பெற்றிருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X