இந்த ஊரில் மட்டும் விக்ரம் முக்கூட்டியே ரிலீசாகுதாம்...கொடுத்து வைத்த ரசிகர்கள்

சென்னை : விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவை பார்க்க ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ எல்லா ஊர்களிலும் ஒரே நேரத்தில் ரிலீசாகாது. ஒரே ஒரு ஊரில் மட்டும் முன்கூட்டியே ரிலீசாகும் என்ற தகவல் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இந்த ஆண்டில் அடுத்து ரிலீசாக போகும் பெரிய படம் என்றால் அது கமலின் விக்ரம் படம் தான். இந்த படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. உலகம் முழுவதும் 5000 தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது. ரிலீசிற்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளதால் ப்ரொமோஷன் வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

விக்ரமில் கமல் ரோல் இதுவா

விக்ரமில் கமல் ரோல் இதுவா

விக்ரம் படத்தின் ப்ரொமோஷன் வேலைகளை தீவிரமாக உலகம் முழுவதும் மேற்கொண்டு வருகிறார் கமல். விக்ரம் படத்தில் கமல், ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. எமோஷன் கலந்து ஆக்ஷன் படமாக விக்ரம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், இந்த படத்தின் கதை, கேரக்டர் ஆகியன கமல் நடிக்க வேண்டும் என பல காலத்திற்கு முன் நினைத்து, அது முடியாமல் போன ரோல் என லோகேஷ் கனகராஜே கூறி உள்ளார்.

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. விக்ரம் படத்தின் கதை பற்றி பல தகவல்கள் வெளியாகி வருவதால், உண்மையில் என்ன தான் படத்தின் கதை. கமலில் ரோல் என்ன, டைட்டல் ரோலான விக்ரம் கேரக்டரில் தான் சூர்யா நடித்திருக்கிறார் என கூறப்படுவதால், அவருடைய ரோல் என்ன என பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர்.

அதிகரிக்கும் டிக்கெட் விற்பனை

அதிகரிக்கும் டிக்கெட் விற்பனை

விக்ரம் படம் பற்றி அடுத்தடுத்து வெளியாகும் தகவல்கள் ஆச்சரியம், ஆச்சரியம் கொடுத்து வருவதால் விக்ரம் படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதற்காக ரசிகர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது.

ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ எப்போ

ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ எப்போ

விக்ரம் படத்திற்கான டிக்கெட் முன்பதிவிலேயே பெரிய தொகை கிடைத்துள்ளதாகவும், டிக்கெட் முன்பதிவு செம ஜோராக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழகம் முழுவதும் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோஅதிகாலை 4 மணிக்கு திரையிடப்படுகிறது. சில நகரங்களில் காலை 7 மணிக்கும், இன்னும் சில இடங்களில் காலை 10.30 மணிக்கு தான் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ திரையிடப்பட உள்ளது.

முன்கூட்டியே ரிலீசாகிறதா விக்ரம்

முன்கூட்டியே ரிலீசாகிறதா விக்ரம்

ஆனால் விக்ரம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ, மதுரையில் மட்டும் முன்கூட்டியே அதிகாலை 3.45 மணிக்கே ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ திரையிடப்பட உள்ளதாம். இதற்கான டிக்கெட் புக்கிங் துவங்கி உள்ளது. கமல்ஹாசனுக்கு எப்போதுமே மதுரையில் பெரிய ரசிகர் கூட்டம் உண்டு என்பதால், இந்த விஷயம் தெரிந்ததும் மதுரை ரசிகர்கள் செம குஷியாகி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X