Vikram First review...ரிலீசுக்கு முன்பே வெளியான விக்ரம் விமர்சனம் இதோ...

சென்னை : கமல் நடித்த விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ள நிலையில், இன்றே படத்தின் முதல் விமர்சனம் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களை ஆச்சரியப்படவும், அதிர்ச்சி அடையவும் வைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம் அனைவரையும் உச்சகட்ட எதிர்பார்ப்பில் வைத்துள்ளது. படம் பற்றி வெளியாகும் அடுத்தடுத்த தகவல்கள், சர்வதேச லெவலில் ப்ரொமோஷன் ஆகியன பட ரிலீஸ் மீதான ஆர்வத்தை தூண்டி வருகிறது. ரிலீசிற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் டிக்கெட் புக்கிங் மற்றும் விற்பனையிலேயே 200 கோடி வசூலாகி உள்ளது.

ஒரு வாரத்திற்கு ஹவுஸ்ஃபுல்

ஒரு வாரத்திற்கு ஹவுஸ்ஃபுல்

முதல் வாரத்திற்கு பல தியேட்டர்களில் இப்போதே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து, ஹவுஸ்ஃபுல் ஆகி விட்டது. ஜுன் 3 ம் தேதி உலகம் முழுவதும் விக்ரம் படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சில நாடுகளில் விக்ரம் படம் ஜுன் 2 ம் தேதியே ரிலீசாக உள்ளது. தமிழகம் மற்றும் இந்தியாவில் பல பகுதிகளில் விக்ரம் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ அதிகாலை 4 மணிக்கும், சில இடங்களில் 7 மணிக்கும், இன்னும் சில பகுதிகளில் 10.30 மணிக்கு திரையிடப்பட உள்ளது.

மதுரையில் முன்னாடியே ரிலீஸ்

மதுரையில் முன்னாடியே ரிலீஸ்

ஆனால் மதுரை பகுதிகளில் உள்ள தியேட்டர்களில் மட்டும் அதிகாலை 3.45 மணிக்கே விக்ரம் படம் திரையிடப்பட உள்ளதாக விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான டிக்கெட் விற்பனை துவங்கி உள்ளதால் ரசிகர்கள் போட்டி, போட்டுக் கொண்டு டிக்கெட்டை வாங்கி வருகிறார்கள். இந்நிலையில் இன்று இரவு 8.10 மணிக்கு உலகின் மிக உயரமான துபாயில் உள்ள புர்ஜ் கலீஃபா கட்டிடத்தில் விக்ரம் படத்தின் டிரைலர் திரையிடப்பட உள்ளது.

வெளியான விக்ரம் விமர்சனம்

வெளியான விக்ரம் விமர்சனம்

இந்த சமயத்தில் ரிலீசிற்கு இரண்டு நாட்கள் இருக்கும் போது, இன்றே விக்ரம் படத்தின் விமர்சனம் வெளியாகி உள்ளது. சர்வதேச சென்சார் கழகம் என பெயரிடப்பட்டுள்ள இன்ஸ்டாகிராம் கணக்கில் விக்ரம் படத்தின் விமர்சனம் வெளியிடப்பட்டுள்ளது. அதில், கோலிவுட்டில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே மிகச் சிறந்த ஆக்ஷன் த்ரில்லர் படங்களில் விக்ரம் படமும் ஒன்று. என்ன ஒரு அற்புதமான, தனித்துவமான High Voltage Action.படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை கதையை த்ரில்லிங்காகவே கொண்டு சென்றுள்ளனர்.

Recommended Video

Interview with Vikram Movie Lyricist Vishnu Edavan | இந்த பாட்டு நானே கேட்டு வாங்கினேன் | #Kollywood
விக்ரம் படத்திற்கு என்ன ரேட்டிங்

விக்ரம் படத்திற்கு என்ன ரேட்டிங்

கமல்ஹாசன், ஃபகத்ஃபாசில், விஜய் சேதுபதி மிக அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். அனைத்து விதத்திலும் இவர்கள் பார்ப்பவரின் மனதை கொள்ளையடித்து விட்டனர். க்ளைமாக்ஸில் தான் படத்தின் உச்சகட்ட த்ரில்லிங்கை வைத்துள்ளார்கள். விக்ரம் படம் சர்ப்ரைஸ் ஹிட்டாக இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விக்ரம் படத்திற்கு 3.5/5 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X