பத்தல பத்தல...விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டே வேற லெவலில் இருக்கே...எப்போ வருது தெரியுமா?

சென்னை : கமலின் விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியிட்டு தேதியுடன், அசத்தலான தகவல்களை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர். இதனால் ரசிகர்கள் செம ஆர்வத்தில் காத்திருக்கிறார்கள்.

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல் நடித்துள்ள படம் விக்ரம், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.

மே 15 ல் டிரைலர், ஆடியோ

மே 15 ல் டிரைலர், ஆடியோ

விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி பான் இந்தியன் படமாக ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதற்கு முன் மே 15 ம் தேதி விக்ரம் படத்தின் டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீடு நடைபெறும் என அறிவித்துள்ளார்கள். தொடர்ந்து விக்ரம் படம் பற்றி வெளியாகி வரும் அப்டேட்கள் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

வேற லெவல் அப்டேட்

வேற லெவல் அப்டேட்

நான்கு ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் கமல் படம் என்பதால் வேற லெவலில் அப்டேட்களை வெளியிட்டு வருகிறார்கள். படம் பற்றிய ஒவ்வொரு தகவலும் ஆச்சரியப்பட வைத்து வருகிறது. இந்த படத்தின் ஹைலைட்டாக சொல்லப்படுவது De Aging Technology மூலமாக 1980 களில் இருந்ததை போன்று கமலை காட்டி உள்ளது தான். பிளாஷ்பேக் காட்சிகளில் இளமையான கமல் வரும் காட்சிகள் இடம் பெற உள்ளதாம்.

கமலின் மாஸ் டான்ஸ்

கமலின் மாஸ் டான்ஸ்

இதற்கிடையில் இந்த படத்தில் கமல், அபூர்வ சகோதரர்கள் படத்தில் வரும் அண்ணாத்த ஆடுறார் பாடல் ரேஞ்சிற்கு இறங்கி குத்தாட்டம் போட்டுள்ளார் என சொல்லப்பட்டது. இளமையான கமல், கமலின் செம மாஸ் டான்ஸ் என ரசிகர்களுக்கு படம் செம ட்ரீட்டாக இருக்க போகிறது என அனைவரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சமீபத்தில் விக்ரம் படத்தை பார்த்து விட்டு கமலை பாராட்டியதை, தன்னுடைய 36 வருட தவம் பூர்த்தி ஆகி விட்டதாக லோகேஷ் கனகராஜ் உணர்ச்சி பெருக்குடன் ட்விட்டரில் பகிர்ந்திருந்தார்.

விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருது

விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள் வருது

இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக மே 11 ம் தேதி விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கி வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பத்தல பத்தல என துவங்கும் இந்த பாடலை கமலே எழுதி, பாடி உள்ளாராம். இதனை அனிருத்தின் ஸ்டூடியோவில் கமல், அனிருத், லோகேஷ் கனகராஜ் அமர்ந்திருப்பது போன்ற போட்டோவுடன் வெளியிட்டுள்ளனர்.

செம டிரெண்டிங்

செம டிரெண்டிங்

கமலுடன் சேர்ந்து அனிருத் எடுத்துக் கொண்ட போட்டோவும், விக்ரம் ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றிய அறிவிப்பும் சோஷியல் மீடியாவில் செம டிரெண்டாகி வருகிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்த அறிவிப்பு மற்றும் போட்டோவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X