பொன்னியின் செல்வன் 50வது நாள்… ஒன்றுகூடிய விக்ரம், கார்த்தி, த்ரிஷா… இதுதான் ரியல் செலிப்ரேஷன்!
சென்னை: மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மக்களின் பெரிய வரவேற்போடு திரையரங்குகளில் கொண்டாட்டப்பட்ட பொன்னியின் செல்வன், இதுவரை 500 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் திரையரங்குகளில் 50 நாட்கள் கடந்துள்ளதை படக்குழுவினர் ரியலாக செலிப்ரேட் செய்துள்ளனர்.

PS 1 சக்சஸ் மீட்
தமிழ்த் திரையுலகின் கனவு படைப்பான பொன்னியின் செல்வன், செப்டம்பர் 30ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. லைகாவின் பிரம்மாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியிருந்த இந்தப் படத்தில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா, சோபிதா துலிபா, சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். மிகப் பெரிய மல்டி ஸ்டார் படமாக வெளியான பொன்னியின் செல்வன், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நவம்பர் 6ம் தேதி நடைபெற்ற பொன்னியின் செல்வன் படத்தின் சக்சஸ் மீட்டில், படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர்.

பாக்ஸ் ஆபிஸில் 500 கோடி
பான் இந்தியா படமாக பல மொழிகளில் வெளியான பொன்னியின் செல்வன் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் சாதனை படைத்தது. இந்தப் படம் உலகம் முழுவதும் 500 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸான பொன்னியின் செல்வன், திரையரங்குகளில் 50 நாட்களை கடந்து சாதனை படைத்து வருகிறது. இந்தப் படம் ஓடிடியில் வெளியான பின்னரும் கூட தியேட்டர் ஆடியன்ஸிடம் வரவேற்பு குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,.

50வது நாள் கொண்டாட்டம்
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் 50வது நாளை படக்குழுவினர் ரீயுனியன் வைத்து கொண்டாடியுள்ளனர். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஷோபிதா துலிபலா ஆகியோர் ஒன்றுகூடியதுடன், வித்தியாசமாக செல்ஃபியும் எடுத்துள்ளனர். அதில், ஒரு போட்டோவில் ஐந்து பேரும் செல்போனை கீழிருந்து மேலாக வைத்து முகத்தை மட்டும் ஃப்போக்கஸ் செய்துள்ளனர். இன்னொரு போட்டோவில் கால்களை மட்டும் வட்டமாக வைத்து போட்டோ எடுத்துள்ளனர். இந்த புகைப்படங்களை சோபிதா துலிபலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

விரைவில் செகண்ட் பார்ட்
விக்ரம், வெந்து தணிந்தது காடு படங்களை தொடர்ந்து இந்தாண்டில் 50 நாட்களை கடந்த படத்தின் வரிசையில் பொன்னியின் செல்வனும் இடம்பெற்றுள்ளது. முதல் பாகத்திற்கு கிடைத்த மிகப் பெரிய வரவேற்பால், இரண்டாம் பாகத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம், அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இறுதியில் வெளியாகும் சமீபத்தில் உதயநிதி தெரிவித்திருந்தார். முன்னதாக பொன்னியின் செல்வன் 50வது நாளை கொண்டாடும் விதமாக விக்ரமும் ட்வீட் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











