அடிதூள்...அனல் பறக்க போகுது...ஒரே நாளில் விக்ரம் ஆடியோ, டிரைலர் ரிலீஸ்...எப்போ தெரியுமா?

சென்னை : கமலின் விக்ரம் படத்தின் ஆடியோ மற்றம் டிரைலரை ஒரே நாளில் வெளியிட உள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அறிவித்துள்ளது. இது ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டமாக அமைய உள்ளது.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில், டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள படம் விக்ரம். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

வேற லெவல் ப்ரொமோஷன்

வேற லெவல் ப்ரொமோஷன்

ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ள விக்ரம் படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகளும், ப்ரொமோஷன் வேலைகளும் படு வேகமாக நடைபெற்று வருகிறது. ரயில் மூலம் ப்ரொமோஷனை துவக்கியவர்கள், படத்தின் ஆடியோ வெளியீட்டை ஐக்கிய அரபு அமீரகத்திலும், டிரைலரை பிரான்சில் மே 18 ம் தேதி நடைபெற உள்ள கென்ஸ் சர்வதேச திரைப்பட விழாவிலும் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

அட இவர் வேற இருக்காரா

அட இவர் வேற இருக்காரா

இதற்கிடையில் புதிய அப்டேட்டாக, கமல் இளமை தோற்றத்தில் நடிக்கும் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு ஜோடியாக பிரபல கன்னட நடிகை ஷான்வி ஸ்ரீவத்சவா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் 10 நிமிடங்கள் மட்டுமே இவர் வரும் காட்சிகள் இருந்தாலும் மிக முக்கியமான அழுத்தமான கேரக்டரில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. கமலுக்கு மட்டும் தான் பிளாஷ்பேக் காட்சிகள் என்றால், இதில் விஜய் சேதுபதி கேரக்டரும் வருகிறதாம்.

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அறிவிப்பு

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அறிவிப்பு

விக்ரம் படம் பற்றி தினம் தினம் வெளியாகும் தகவல்கள் படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை பல மடங்கு அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்று மாலை 6 மணிக்கு மிக பெரிய, முக்கியமான அறிவிப்பு ஒன்று விக்ரம் பற்றி வெளியிடப்பட உள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தது. இதனால் இது ஃபர்ஸ்ட் சிங்கிள் பற்றியதாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்

ஆனால் யாரும் கொஞ்சமும் எதிர்பாராத விதமாக விக்ரம் படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீடு ஆகியன மே 15 ம் தேதி நடைபெறும் என ராஜ்கமல் ஃபிலிம்ஸ் அறிவித்துள்ளது. அனிருத்தின் தீப்பிடிக்கும் இசையில் ஆடியோ மற்றும் டிரைலர் அமைந்துள்ளதாக ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. இதனால் ரசிகர்களுக்கு இது டபுள் ட்ரீட்டாக நிச்சயம் இருக்கும் என கூறப்படுகிறது. ராஜ்மகல் ஃபிலிம்ஸ் இந்த அறிவிப்பை வெளியிட்ட உடனேயே ட்விட்டரில் #Kamalhaasan ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆக துவங்கி விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X