Don't Miss!
- Automobiles
சாட்டையை சுழற்றும் தமிழக காவல் துறை... இனி இந்த விதியை மீறினால் காலி... எல்லா இடத்துலயும் நின்னு பிடிக்கறாங்க!
- News
இட்லி சாப்பிட முடியல! பலூன் மாதிரி ஆயிட்டேன்..! மீண்டும் ‘ஐ ஆம் பாவம்’ ஸ்டேட்டஸ் போட்ட நித்யானந்தா!
- Finance
ரஷ்யாவுக்கு நாங்க இருக்கோம்.. கைகொடுக்கும் சீனா..!
- Lifestyle
இந்த ஒரு ஜூஸ் குடிப்பது உங்க பிபியை குறைச்சி இதய ஆரோக்கியத்தை பாதுகாக்குமாம் தெரியுமா?
- Technology
அரசு எச்சரிக்கை: SBI பயனர்களே உஷார்- உடனே இதை டெலிட் செய்யுங்கள்., தொடவே வேண்டாம்!
- Sports
கொல்கத்தாவில் மிரட்டும் மழை.. ஆட்டம் ரத்தானால் அடுத்த சுற்றுக்கு செல்வது யார்..? பிசிசிஐ திணறல்
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
விக்ரம் விழா...இடத்தை விட்டுக்கொடுத்தாரா லெஜண்ட் அண்ணாச்சி...உரிய மரியாதை தரலியே
சென்னை : உலக நாயகன் கமலின் 'விக்ரம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளைக்கு சென்னையில் நேரு விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடக்கிறது, இதில் லெஜண்ட் அண்ணாச்சிக்கு சிறு வருத்தம் என்கிறார்கள்.
வழக்கம் போல் கலைநிகழ்ச்சிகளுடன் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், சூர்யா உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக செய்திகள் ஒரு பக்கம் பரவுகிறது. அனால் இதே நேரு உள்ளரங்கில் தன் பட ஆடியோ ரிலீஸை அதே மே 15 ஆம் தேதியில் நடத்த திட்டமிட்டு மூன்று நாட்களுக்கு உரிய பணத்தையும் கட்டி புக் செய்திருந்தாராம் லெஜண்ட் சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி.
விக்ரம்
ஆடியோ
ரிலீஸ்...
மரண
மாசாக
காத்திருக்கும்
ரசிகர்கள்...
எப்படி
தயாராகறாங்க
பாருங்க!

கமலுக்கு விட்டுக் கொடுத்தாரா லெஜண்ட் அண்ணாச்சி
ஆனா கமல் அதை எல்லாம் சட்டை செய்யாமல் 'நான் சொன்னே'-ன்னு சொல்லி அவங்கலை வேறொரு தேதியில் ஃபங்ஷன் வைக்கச் சொல்லுங்க, அவங்க ஃபங்ஷனனுக்கு நானே நேரில் வரேன்னும் சொல்லுங்க ' என்றாராம். இதை கேள்விப்பட்ட லெஜண்ட் சரவணா அண்ணாச்சி உடனே தன் புக்கிங்கை கமலுக்கு விட்டுக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

காசுக் கூட வாங்காம...
ஆனா இப்ப 'என்னாய்யா.. நாளைக்கு நடக்கர விக்ரம் பங்க்ஷனுக்கு இதுவரை எனக்கு இன்விடேசன் வரலை' -ன்னு அண்ணாச்சி கேட்டு வருத்தப்பட்டதாக பேசிக்கொள்கிறார்கள். 'இன்வைட் பண்ணினாலும் போறோமா இல்லையா என்பது வேறு விஷயம் .. ஆனா நாம் புக் புண்ணிய இடத்தை காசுக் கூட வாங்காம விட்டுக் கொடுத்ததுக்கு ஒரு மரியாதை கிடையாதாப்பா' என்றெல்லாம் அண்ணாச்சி வருத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெஞ்சுக்குள்ளேயே பொத்தி வச்சு குமுறும் நிலை
சினிமாக்காரங்க மனசுல பட்டத மனசுக்கு பிடிச்சவங்க கிட்ட பேசறது அடிக்கடி நடக்கிற உண்மையான விஷயம் தான். இதில் சினிமா நண்பர்களுடன் ஏற்படும் மனக்கசப்பு மனவேதனை சில நேரங்களில் வெளியே சொல்ல முடியாது. அப்படி சொன்னாலும் எல்லோரையும் பாதிக்கும் என்ற காரணத்தினால் பல நேரங்களில் பல விஷயங்கள் மூடி மறைக்கப்படுகிறது. இந்த விக்ரம் படத்தின் விழா, நேரு ஸ்டேடியம், ஒரே தேதி, விட்டுக்கொடுத்தல், போன்ற விஷயங்கள் இதற்கு முன்னால் பலமுறை பலருக்கும் நடந்திருக்கிறது. ஆனால் அது வெளியே தெரியாமல் பலரும் பார்த்துக் கொண்டுள்ளனர்.

அவ்வப்போது நடப்பதுதான் புதிதல்ல
சினிமா நிகழ்ச்சிகள் மட்டுமல்லாமல் சில நேரங்களில் அரசியல் சார்ந்த நிகழ்வுகளும் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறுவது வழக்கம். இதே மாதிரி குழப்பங்கள் அரசியல் ரீதியாகவும் நடக்கும். நாகரீகம் கருதி சில நேரங்களில் சில வாய்க்கா சண்டைகளை வெளியே சொல்லாமல் மௌனமாக பல பிரபலங்கள் இருந்துள்ளனர்.

லெஜண்ட் அண்ணாச்சி உண்மையா?
கமல் மற்றும் அண்ணாச்சி விவகாரம் எந்த அளவுக்கு உண்மை என்பதை நாளை மேடையில் யாராவது பேசினால் தான் உண்மை நிலை புரியும். நாளை நடக்கவிருக்கும் இந்த விக்ரம் பட விழாவில் எப்படிப்பட்ட பிரபலங்கள் வரப்போகிறார்கள் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.