விடாது கருப்பு என தொடரும் விக்ரம் படத்தின் கலெக்ஷன்ஸ்.. ஒரு மாதத்தில் எவ்ளோ வசூல் தெரியுமா?

சென்னை : நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் படம் கடந்த மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.

தற்போது இந்தப் படம் வெற்றிகரமாக ஒரு மாதத்தை திரையரங்குகளில் நிறைவு செய்துள்ளது.

வரும் 8ம் தேதி இந்தப் படம் ஓடிடியில் ரிலீசாக உள்ளது. இந்த வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

கமலின் விக்ரம்

கமலின் விக்ரம்

நடிகர் கமல்ஹாசனின் 4 ஆண்டு இடைவெளிக்கு பிறகு திரையரங்குகளில் வெளியானது விக்ரம் படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னதாக மாநகரம், கைதி, மாஸ்டர் படங்கள் வெளியான சூழலில் இந்தப் படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு காணப்பட்டது. ஆனால் இந்தப் படம் ரசிகர்களை ஏமாற்றவில்லை.

சிறப்பான அனுபவம்

சிறப்பான அனுபவம்

மாறாக கடந்த மாதம் 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் சர்வதேச அளவில் சிறப்பான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வெற்றிப்படமாக இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிவருகிறது. படத்திற்கு பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா மற்றும் நரேன் ஆகியோரின் நடிப்பு பலமாக பார்க்கப்படுகிறது.

உலகநாயகன் கமல்

உலகநாயகன் கமல்

கமல்ஹாசன் இந்த வயதிலும் தான் சிறப்பான உலகநாயகன்தான் என்பதை இந்தப் படத்திலும் நிரூபித்துள்ளார். ஒவ்வொரு காட்சிகளில் மட்டுமில்லாமல் பாடல் காட்சிகளிலும் அவரது எனர்ஜி இளம் நாயகர்களுக்கு சவால் விடும் வகையில் அமைந்திருந்தது. இரு தினங்களுக்கு முன்பு படத்தின் பத்தல பத்தல வீடியோ பாடலும் வெளியாகியுள்ளது.

ரூ.420 கோடிகளை தாண்டிய வசூல்

ரூ.420 கோடிகளை தாண்டிய வசூல்

படம் தற்போது ஒரு மாதத்தை திரையரங்குகளில் நிறைவு செய்துள்ளது. இந்த 30 நாட்களில் படத்தின் கலெக்ஷன் சர்வதேச அளவில் 420 கோடி ரூபாய்களை தாண்டியுள்ளது. அடுத்தடுத்த படங்கள் தமிழில் வெளியான நிலையிலும் அனைத்தையும் பீட் செய்து தொடர்ந்து முன்னணியில் உள்ளது விக்ரம்.

தமிழகத்தில் ரூ.175 கோடி வசூல்

தமிழகத்தில் ரூ.175 கோடி வசூல்

தொடர்ந்து படத்தின் வசூல் 500 கோடிகளை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் கமலின் திரையுலக கேரியரில் அதிக வசூலை எட்டிய படம் என்ற பெருமையும் படத்திற்கு கிடைத்துள்ளது.படம் தற்போது 6 வாரங்களை கடந்த நிலையில், தமிழகத்தில் 175 கோடி ரூபாய் கலெக்ஷனை தாண்டியுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

இதனால் அடுத்தடுத்த படங்களில் கமல் கவனம் செலுத்தவுள்ளார். சிவகார்த்திகேயனுடன் ஒரு படத்தை முன்னதாக தனது ராஜ்கமல் சார்பில் அறிவித்துள்ளார். இந்தியன் 2 படத்திற்கு முன்னதாக கமலும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளாராம். மகேஷ் நாராயணன் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X