twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் அந்த காலம், இந்த காலம்..கமல்ஹாசனின் விளம்பர யுக்தி

    |

    சென்னை: கமல்ஹாசனின் விக்ரம் ஜூன் 3 வெளியாகிறது. அப்படத்தை வெற்றிப்பெற வைக்க கமல்ஹாசன் அனைத்து விளம்பர யுக்திகளையும் பயன்படுத்துகிறார்.

    இந்தியாவிலேயே முதன்முறையாக என்.எஃப்.டியில் போஸ்டர் விற்பனை, மெடாவெர்ஸ் என நவீன யுக்திகளை கமல் பயன்படுத்தியுள்ளார்.

    அனைத்துமொழிகளிலும் நேரடியாகச் சென்று பட விளம்பரத்தை செய்யும் வேலையை கமல் நகர்த்தியுள்ளார்.

    விக்ரம் போல மல்டி ஹீரோ சப்ஜெக்ட்.. முன்னணி நடிகர்களான விஜய், அஜித்திடம் எதிர்பார்க்கலாமா?விக்ரம் போல மல்டி ஹீரோ சப்ஜெக்ட்.. முன்னணி நடிகர்களான விஜய், அஜித்திடம் எதிர்பார்க்கலாமா?

    புதுமைகளின் நாயகன் கமல்

    புதுமைகளின் நாயகன் கமல்

    தமிழக சினிமாவின் முக்கிய நட்சத்திரம் கமல். தான் சம்பாதிக்கும் பணத்தை சினிமாவில் மட்டுமே முதலீடு செய்பவர். சினிமா குறித்த அத்தனை விஷயங்களையும் அறிந்து வைத்துள்ளவர். தமிழ் சினிமாவில் என்னென்ன புதுமைகள் உண்டோ அத்தனையையும் புகுத்தியவர். தமிழக சினிமாத்துறையை உலக அளவிற்கு உயர்த்தியவர்.

    விதவிதம் வித்தியாசம் அதுதான் கமல்

    விதவிதம் வித்தியாசம் அதுதான் கமல்

    கமல்ஹாசன் படங்களில் முதன்முறை என்பது பல படங்களில் நடந்துள்ளது. பாடல் இல்லாத படம், ஒரே இரவில் நடக்கும் கதை, கதாநாயகி இல்லாத படம், இரட்டை கதைகளை இருவர் பாணியில் சொல்லும் திரைக்கதை (விருமாண்டி), குருதிப்புனலில் மிக யதார்த்தமாக கதை சொல்லிய விதம், அந்த காலத்திலேயே பான் இந்தியா படமாக பேசும் படம், ஹேராம், பார்வையற்றவராக ராஜபார்வை, மன பிறழ்வு கொண்ட கதாநாயகனாக குணா, ஆளவந்தான், 10 பாத்திரங்களாக தசாவதாரம், முழுவதும் பெண்ணாக அவ்வை சண்முகி என பல படங்களை வித்தியாசமாக செய்தவர் கமல்ஹாசன்.

    புதுமைகள் கண்ட விக்ரம்

    புதுமைகள் கண்ட விக்ரம்

    அவரது விக்ரம் படம் 1986 ஆம் ஆண்டு வெளியானபோது அதற்கான விளம்பரமாக அப்படத்தின் கதையை ஒரு பிரபல வார இதழில் கதாசிரியர் சுஜாதா எழுதினார். அதற்காக படத்தின் காட்சிகளில் வரும் ஸ்டில்கள் பயன்படுத்தப்பட்டன. இது தமிழ் சினிமா வரலாற்றில் முக்கியமான ஒன்று. இது படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

    விஸ்வரூபமும் டிடிஎச் முயற்சியும்

    விஸ்வரூபமும் டிடிஎச் முயற்சியும்

    கமல் தனது விஸ்வரூபம் படத்தை டிடிஎச்சில் வெளியிட முடிவு செய்தார். அதற்கு திரையுலகிலேயே எதிர்ப்பு கிளம்பியது. புதுமைகள் வரும் முன்னரே அதை தேடிச் சென்று அரவணைப்பது கமலின் பழக்கம். அதேபோல் பிக்பாஸ் நிகழ்ச்சியை தனது விளம்பரத்துக்கு பயன்படுத்திக்கொண்டார். இதன் மூலம் கமல் எப்போதும் ஊடக வெளிச்சத்திலேயே இருந்தார்.

    விக்ரம் வெற்றிபெற உழைக்கும் இளைஞர்கள் கூட்டம்

    விக்ரம் வெற்றிபெற உழைக்கும் இளைஞர்கள் கூட்டம்

    இந்நிலையில் கமலின் இந்தியன் 2 படம் சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. கமலின் கடைசிபடம் 2018 ஆம் ஆண்டு வெளிவந்த நிலையில் தற்போது 2022 ஆம் ஆண்டு விக்ரம் படம் வெளியாகிறது. இது முதல்பாகத்தின் தொடர்ச்சியா? அல்லது விக்ரம் படத்தில் கமல் ஹாசன் செய்யமுடியாமல் போனதன் தொடர்ச்சியா அல்லது லோகேஷ் கனகராஜ் போன்ற புதியவர்களின் புதிய கதை அமைப்பா தெரியாது. ஆனால் விக்ரம் வெற்றிப்படமாக அமைய சகல விதத்திலும் உழைக்கின்றனர்.

     வசூல் ரீதியாக வெற்றி அடையுமா?

    வசூல் ரீதியாக வெற்றி அடையுமா?

    வசூல் ரீதியாக படம் வெளியாகும் முன்னரே 200 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் வெற்றிக்காக அனைத்து ஊடகங்களையும் கமல் பயன்படுத்தியுள்ளார். அதன் கிளிம்ஸ், சாங்க்ஸ், ட்ரெய்லர் வெளியீட்டு விழா, கதாநாயகர்கள் 3 பேர் படத்தில் நடிப்பது என ஏகப்பட்ட எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளார்.

    நவீன யுதிகளை பயன்படுத்தி விளம்பரம்

    நவீன யுதிகளை பயன்படுத்தி விளம்பரம்

    சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்ரம் ட்ரெய்லரை வெளியிட்டார், அது தவிர விக்ரம் போஸ்டரை என்.எஃப்.டி எனும் கிரிப்டோ பிஸ்னஸ் போன்ற ஒரு நவீன வியாபாரமுறையில் விற்பனை செய்துள்ளார். இதை வாங்குபவர்களுக்காக மெடாவெர்ஸ் தொழில் நுட்பம் மூலம் உறுப்பினர், விர்ச்சுவல் உலகில் அவர்களுக்கு இடம், இனி கமல் படக்குழுவினர் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் அழைப்பு, பட வாய்ப்பு என பல விஷயங்கள் அதில் சொல்லப்பட்டுள்ளன.

    Recommended Video

    Vikram 4AM show Celebration Rohini Theatre | #VikramFDFS
    அனைத்து விளம்பர யுக்திகளையும் பயன்படுத்தும் கமல்

    அனைத்து விளம்பர யுக்திகளையும் பயன்படுத்தும் கமல்

    பல நவீன யுக்திகளை பயன்படுத்தி படத்தை விளம்பரப்படுத்தியுள்ள கமல் படம் வெளியாகும் அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் சென்று பட விளம்பரத்தைச் செய்துள்ளார், மலையாளத்தில் மோகன்லால் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். துபாய் புர்ஜ் கலீஃபாவில் விக்ரம் காட்சிகள் திரையிடப்பட்டன.

    பீஸ்ட், வலிமையை மிஞ்சுவாரா விக்ரம்?

    பீஸ்ட், வலிமையை மிஞ்சுவாரா விக்ரம்?

    உலகம் முழுவதும் விக்ரம் படம் திரையிடப்படுகிறது. இதன் மூலம் கமல்ஹாசன் படங்களில் இதுவரை இல்லாத மெகா வசூலையும், தமிழ் படங்களில் சமீபத்தில் வெளிவந்த பீஸ்ட், வலிமை பட வசூலையும் விக்ரம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Before the release of Vikram, Kamal Haasan has been working in various fields with huge success.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X