twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விக்ரம் பட வெற்றி..கொண்டாட்ட மனநிலையில் கமல்ஹாசன்

    |

    சென்னை: நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் சமீபத்தில் விக்ரம் படம் வெளியானது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஃப்ஹத் பாசில், சூர்யா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

    Recommended Video

    Vikram பட வசூல் சாதனை... கொண்டாட்ட மனநிலையில் KamalHaasan *Kollywood | Filmibeat Tamil

    விக்ரம் படம் முற்றிலும் மாறுபட்ட ஒரு படமாக அமைந்ததால் ரசிகர்கள் அதற்கு பெருத்த ஆதரவு கொடுத்தனர். இதனால் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்றது.

    உலகம் முழுவதும் படத்திற்கு கிடைத்துள்ள பெரும் வரவேற்பு கமல்ஹாசனை மிகவும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது போகுமிடமெல்லாம் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்.

    படத்திற்கு படம் லேண்ட்மார்க்...அசத்தும் கமல்...குணாவில் குகை...விக்ரமில் என்ன? படத்திற்கு படம் லேண்ட்மார்க்...அசத்தும் கமல்...குணாவில் குகை...விக்ரமில் என்ன?

    60 ஆண்டு கலைப்பயணம்

    60 ஆண்டு கலைப்பயணம்

    நடிகர் கமல்ஹாசன் தனது ஐந்தாவது வயது முதல் திரைப் படங்களில் நடித்து வருகிறார். 60 ஆண்டுகால திரையுலக வாழ்க்கைக்கு சொந்தக்காரரான கமல்ஹாசன் 70 இறுதிகளில் கதாநாயகனாக திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கதாநாயகனாக நடிக்க ஆரம்பித்த கமல் தமிழ் திரையுலகில் காதல் இளவரசனாக அங்கீகரிக்கப்பட்டார்.

     சகலகலா வல்லவர்

    சகலகலா வல்லவர்

    அவரது நடன திறமை, அழகான உருவம், அவருடைய ஆக்சன் தமிழகம் முழுவதும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. வித்தியாசமான பாத்திரங்களை ஏற்று நடிக்க ஆரம்பித்ததால் அனைத்து மக்களின் அன்பையும் அவர் பெற்றார். கமல்ஹாசன் எப்பொழுதும் வித்தியாசமான படங்களை தரக்கூடியவர். அதுவே அவரை உலக நாயகனாக்கியது.

    1986-ல் அமோக வெற்றிப்பெற்ற விக்ரம்

    1986-ல் அமோக வெற்றிப்பெற்ற விக்ரம்

    1986 ஆம் வருடம் பிரபல எழுத்தாளர் சுஜாதாவுடன் இணைந்து விக்ரம் என்கிற படத்தை கமல் நடித்து வெளியிட்டார். இந்த படம் வசூலில் பெரும் சாதனை படைத்தது. புதிய அம்சங்கள் இந்த படத்தில் பயன்படுத்தப்பட்டதால் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன் பல வெற்றிப் படங்களையும் வித்தியாசமான படங்களையும் கொடுக்க ஆரம்பித்தார் உலக நாயகன் என கொண்டாடப்பட்டார்.

    மக்கள் நீதி மய்யம்

    மக்கள் நீதி மய்யம்

    இந்நிலையில் தமிழக அரசியலில் கால் வைத்த நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மையம் என்கிற கட்சியை உருவாக்கினார் ஆரம்பத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் முதன் முதலில் மக்கள் நீதி மையம் கட்சி போட்டியிட்டு குறிப்பிட்ட வாக்கு சதவீதத்தை பெற்றது. ஆனால் தொடர்ந்து அவர் அரசியல், சினிமா இரண்டிலும் செயல்படுவதில் சுணக்கம் காரணமாக பின்னடைவு ஏற்பட்டு பலர் கட்சியை விட்டு விலகிச் சென்றனர்.

    2021 சட்டப்பேரவை தேர்தல்

    2021 சட்டப்பேரவை தேர்தல்

    இந்நிலையில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி பெருவாரியான இடங்களில் போட்டியிட்டது. கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். பெரும் எதிர்பார்ப்புகள் முதல்வர் வேட்பாளராக தன்னை கருதிக் கொண்டு கமல்ஹாசன் பிரச்சாரம் செய்தார். தேர்தல் நேரத்திலேயே கட்சியில் உள்ளுக்குள் பிரச்சினை புகைந்தது.

    படுதோல்வியை சந்தித்த கமல்

    படுதோல்வியை சந்தித்த கமல்

    அவர் கட்சியினர் கமல்ஹாசன் முதல்வராக வருவார் என்கிற மனநிலையில் தேர்தலில் பணியாற்றினார். சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தது திமுக வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மக்கள் நீதி மையம் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை அந்த கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

    திரையுலகிலும் சறுக்கல்

    திரையுலகிலும் சறுக்கல்

    இதனால் கமல்ஹாசனின் அரசியல் எதிர்காலம் அவ்வளவுதான் என்ற நிலை ஏற்பட்டது. மறுபுறம் கொரோனா போன்ற காரணங்களால் கடந்த நான்காண்டு காலமாக கமல்ஹாசனின் படங்கள் எதுவும் வெளிவராமல் போனது. கடைசியாக கமல்ஹாசன் நடித்த விஸ்வரூபம் -2 படம் சரியாக போகவில்லை. சொந்த தயாரிப்பான கடாரம் கொண்டானும் சரியாக போகவில்லை. விஸ்வரூபம் படம் மட்டுமே சுமார் 200 கோடி ரூபாய் அளவிற்கு அது வசூலில் சாதனை படைத்தது.

     லோகேஷ் கனகராஜுடன் இணைந்து விக்ரம்

    லோகேஷ் கனகராஜுடன் இணைந்து விக்ரம்

    இதனால் கமல்ஹாசன் திரை வாழ்க்கை கேள்விக்குறியாகும் நிலையில் இருந்தது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளராக மாறினார் கமல். இனி கமல்ஹாசன் திரைத்துறை மீண்டும் திரும்புவாரா வெற்றிப்படங்களை கொடுக்க முடியுமா என்கிற கேள்வியும் எழுந்தது. இந்நிலையில் விஜய்யின் மாஸ்டர் படத்தை இயக்கி அதன் பின்னர் கைதி படத்தை இயக்கி வெற்றிகரமான இயக்குநராக இருந்த லோகேஷ் கனகராஜுடன் இணைந்து விக்ரம் படம் தயாரிக்க உள்ளதாக கமல் அறிவித்தார்.

    விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில்

    விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில்

    விக்ரம் படம் பெருத்த எதிர்பார்ப்புடன் தயாரானது அதற்கு காரணம் கமலுடன் விஜய்சேதுபதி, ஃபஹத் பாசில் போன்றோர் இணைகின்றனர் அவர்களுடைய ரோல் படத்தில் எந்த விதத்தில் இருக்கும், கமல் என்ன ரோல், இது விக்ரம் படத்தின் அடுத்த பாகமா? என்கிற கேள்வியும் எழுந்தது. இதற்கிடையே இந்த படத்தில் சூர்யாவும் கடைசியில் இணைவதாக தகவல் வெளியானது. இதனால் விக்ரம் படம் குறித்த ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்தது.

    பான் இந்தியா படமாக தயாரான விக்ரம்

    பான் இந்தியா படமாக தயாரான விக்ரம்

    மேலும் இந்த படம் ஒரு பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழிகளில் உருவாக்கப்பட்டது. விக்ரம் படம் வெளியான பின் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அனைத்து மொழிகளிலும் வசூல் சாதனையை முறியடித்தது. தமிழகத்தில் மிகப்பெரிய வசூல் செய்தது. கேரளாவில் மிகப் பெரிய அளவில் வசூல் செய்த முதல் தமிழ் படம் எனவும் சாதனை பெற்றது. ஏறத்தாழ 360 கோடி ரூபாய் வரையிலும் சமீப காலம் வரை விக்ரம் படம் வசூலை வாரி குவித்துள்ளது.

    படம் வெற்றி கொண்டாட்ட மன நிலையில் கமல்

    படம் வெற்றி கொண்டாட்ட மன நிலையில் கமல்

    இதனால் கமல் மிகுந்த உணர்ச்சிவயப்பட்ட நிலையில் மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார். இதற்கு முன்னர் இப்படிப்பட்ட மன நிலையில் யாரும் கமல்ஹாசனை பார்த்ததில்லை. தன்னுடைய படத்திற்கு வெற்றிக்கு காரணம் என லோகேஷ் கனகராஜை பெரிதாக பாராட்டினார் கமல். பின்னர் திடீரென அவருக்கு லெக்சஸ் லக்சரி கார் ஒன்றை பரிசாக அளித்தார். அதன்பின்னர் சூர்யா வீட்டிற்கு திடீரென சென்ற கமல் தன் கையில் கட்டியிருந்த விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்சை கழற்றி அவர் கையில் அணிவித்தார்.

     பரிசுகளை வாரி வழங்கிய கமல்

    பரிசுகளை வாரி வழங்கிய கமல்

    இது தவிர படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குநர்களுக்கு தன் சொந்த செலவில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களை பரிசாக அளித்தார். தொடர்ந்து கமல் இவ்வாறு செய்வதும் பேட்டிகளில் விக்ரம் படத்தை பற்றி அதன் வெற்றியை பற்றி சிலாகித்துப் பேசுவதுமாக இருந்தார். அதன் பின்னர் தன்னுடைய படத்தை விநியோகம் செய்த உதயநிதி ஸ்டாலினை வெகுவாக பாராட்டி பதிவிட்டிருந்தார். விஜய்யை வைத்து படம் எடுப்பேன், ரஜினியுடன் இணைந்து படம் எடுப்பேன் என்றெல்லாம் பேட்டி கொடுத்தார்.

    போகுமிடமெல்லாம் விக்ரம் பற்றியே பேச்சு

    போகுமிடமெல்லாம் விக்ரம் பற்றியே பேச்சு

    தமிழக முதல்வர் ஸ்டாலினையும் நேற்று சந்தித்தார். தான் போகுமிடமெல்லாம் விக்ரம் வெற்றி பெற்றது தன் வாழ்நாளில் இவ்வளவு பெரிய வெற்றியை பார்த்ததில்லை, 300 கோடி ரூபாய் வரை வந்துள்ளது இந்த பணம் எனது கடன்களை அடைக்க உதவும், இதன்மூலம் கடன்களை அடைத்து என்னுடைய சாப்பாட்டுக்கு வழி செய்து கொள்வேன், எனது தெரிந்த நண்பர்கள் உறவினர்களுக்கு உதவுவேன் என்றெல்லாம் கமல் குழந்தைபோல் பேட்டியளித்தார்.

     அளந்து பேசும் கமலா இப்படி பேசுகிறார்

    அளந்து பேசும் கமலா இப்படி பேசுகிறார்

    கமல்ஹாசன் எப்பொழுதும் அளந்து பேசும் மனிதர் தனது வார்த்தைகளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து அதை பார்த்து உபயோகிப்பார். அந்த வார்த்தைகளும் சாதாரண மனிதர்கள் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு சில நேரம் இலக்கியத் தரம் வாய்ந்ததாக இருக்கும். ஆனால் சமீபகாலமாக விக்ரமின் வெற்றிகளை ஒரு குதூகல மன நிலையில் கமல் கொண்டாடுவது பல வெற்றிகளை பார்த்த கமல் இப்படி இருக்கிறாரே என்று நெட்டிசன்கள் ட்விட்டர் சமூக வலைதளங்களில் கிண்டலடித்து மீம்ஸ் உள்ளிட்டவை போட்டு வருகின்றனர்.

    கமல்ஹாசனை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

    கமல்ஹாசனை கிண்டலடிக்கும் நெட்டிசன்கள்

    கமல்ஹாசன் போகுமிடமெல்லாம் விக்ரம் வெற்றி பற்றிய பேசியது குறித்து சொல்ல முடியாது திடீரென உங்கள் வீட்டு கதவைத்தட்டிக்கூட நன்றி தெரிவித்து போவார் தயாராக இருங்கள் என பதிவிட்டு வருகின்றனர். திடீர் திடீரென மற்றவர்களுக்கு பரிசளிப்பது குறித்தும் ட்ரால் செய்து எங்களுக்கு பரிசு இல்லையா என மற்ற நடிகர்கள் கேட்பது போல் மீம்ஸ் போடுகின்றனர். விட்டால் நயன்தாராவைக் கூட கூப்பிட்டு பாராட்டி உங்களுக்கு திருமணமான வேளையில்தான் விக்ரம் படம் நன்றாக ஓடியது என்று சொல்வார் போல என்றெல்லாம் நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

     இதுவரை இப்படி ஒரு வெற்றியை சுவைக்காத கமல்

    இதுவரை இப்படி ஒரு வெற்றியை சுவைக்காத கமல்

    கமலின் கொண்டாட்ட மனநிலைக்கு காரணம் கமல்ஹாசன் நடித்து அவருடைய வாழ்வில் இவ்வளவு பெரிய வசூலை அவர் இதுவரை பார்த்தது இல்லை எனலாம். இதற்கு முன் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது விஸ்வரூபம் தான். பெரும் போராட்டத்தை சந்தித்து அதன் பின்னரே அவரால் வெற்றியை சுவைக்க முடிந்தது. ஆனால் விக்ரம் படம் ஒரு கமர்சியல் படமாக மிக எளிதாக எதிர்பார்ப்புகளை உருவாக்கி பலரும் இணைந்து எடுக்கப்பட்ட படம் மிகப்பெரிய வெற்றியை பாக்ஸ் ஆபீஸ் ஹிட் எனப்படும் வெற்றியை அடைந்ததால் கமலுக்கு அவருடைய மனநிலை மிகுந்த உணர்ச்சி வசப்பட்டதாக இருக்கிறது என்கின்றனர்.

     அனைத்தும் தோல்வி தூக்கி கொடுத்த விக்ரம்

    அனைத்தும் தோல்வி தூக்கி கொடுத்த விக்ரம்

    அரசியல் வாழ்வு கிட்டத்தட்ட முடிந்து போனது என்கிற நிலையில் சினிமா வாழ்வு முடிந்து விடுமோ என்கிற காலகட்டத்தில் விக்ரம் படம் வெளிவந்து இதுவரை தமிழ் திரையுலகில் திரைப்படங்கள் சாதிக்காத பெரும் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்து வரும் நிலையில் இது கமலை மிகுந்த கொண்டாட்ட மனநிலைக்கு தள்ளி உள்ளது என்று விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடரவேண்டும் என்பதே அனைவரின் ஆசை.

    English summary
    Netizens have been teasing Kamal Haasan for talking about it wherever he goes after the huge success of the Vikram movie starring actor Kamal Haasan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X