இது டைட்டில் சாங்கா? கமல் இன்ட்ரோ சாங்கா?...விக்ரம் வேஸ்டட் பாடல் வெளியீடு

சென்னை : விக்ரம் படத்தின் அடுத்த பாடலாக வேஸ்டட் என்ற பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆங்கில வரிகளில் மிக வித்தியாசமாக எழுதப்பட்டுள்ள இந்த பாடலுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. 5 மொழிகளில் ரிலீசாக உள்ள விக்ரம் படம் 5000 தியேட்டர்களில் உலகம் முழுவதும் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை தமிழ் சினிமா மட்டுமின்றி உலகம் சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆர்வமாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

சர்ச்சையான பத்தல பத்தல

சர்ச்சையான பத்தல பத்தல

விக்ரம் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக பத்தல பத்தல பாடல் வெளியிடப்பட்டது. கமல் செம குத்தாட்டம் போட்ட இந்த பாடல் அரசியல் ரீதியாக விமர்சனங்களை சந்தித்தது. அதே சமயம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பையும் பெற்றது. இந்த பாடல் செம ஹிட்டாகி வருகிறது. அனிருத் இசையில் கமலே எழுதி, பாடி, ஆடிய இந்த பாடலின் ஸ்டில்கள் செம டிரெண்டாகின.

சென்டிமென்ட்டான செகண்ட் சிங்கிள்

சென்டிமென்ட்டான செகண்ட் சிங்கிள்

முதல் பாடல் குத்தாட்டம் போட வைப்பதாக இருந்த நிலையில், செகண்ட் சிங்கிள் சென்டிமென்ட் பாடலாக வெளியிடப்பட்டது. போர்கண்ட சிங்கம் பாடல் தந்தை - மகன் பாசத்தை சொல்வதாக இருந்தது. இந்த பாடலின் வரிகள் உருக்கமாகதாக அமைக்கப்பட்டாலும், சில வரிகள் கமலுக்காகவே எழுதப்பட்டது என பாடலாசிரியர் விஷ்ணு கூறினார்.

இந்த பாடலின் காப்பியா

இந்த பாடலின் காப்பியா

படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி வரும் நிலையில் அடுத்த பாடலாக வேஸ்டட் பாடல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கமல் கையில் சரக்கு பாட்டிலுடன் இருப்பது போன்று அமைக்கப்பட்டிருந்தாலும், வாசகங்கள் குடிக்கு எதிராக அமைக்கப்பட்டுள்ளது. இது Thor Rangnarok படத்தின் theme song போல் உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

எதுக்கு இந்த ஆங்கில பாடல்

எதுக்கு இந்த ஆங்கில பாடல்

இந்த பாடலின் ஆரம்பத்தில் போலீஸ் ஸ்டேஷன் பெஞ்சில் கமல் படுத்திருப்பது போலவும், கையில் சரக்கு பாட்டிலுடன் இப்பது போலவும் காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் அனிருத் இசையில் Heisenberg ஆங்கிலத்தில் எழுதிய இந்த பாடல் டைட்டில் சாங்கா அல்லது கமலின் இன்ட்ரோ சாங்கா என ரசிகர்கள் ஆர்வமாக கேட்டு வருகின்றனர். எதுக்கு சம்பந்தமே இல்லாமல் ஆங்கில பாடலை எதற்காக வைத்துள்ளார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X