»   »  சிங்கப்பூரில்விக்ரம் ஸ்டார் நைட்

சிங்கப்பூரில்விக்ரம் ஸ்டார் நைட்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் விக்ரம் பங்கேற்கும் மெகா ஸ்டார் நைட் நிகழ்ச்சி வரும் 22ம் தேதி சிங்கப்பூரில் நடைபெறுகிறது.

இந்தக் கலை நிகழ்ச்சியில் விக்ரமுடன் ஜோதிகா, கிரண், ரீமாசென், சாயாசிங், விந்தியா, காயத்ரி ரகுராம், ஷர்மிலி,கலாபவன் மணி, சிட்டிபாபு, டெல்லி கணேஷ், ரமேஷ்கண்ணா, யூகிசேது, பிண்ணனிப் பாடகர்கள் ஹரீஸ்ராகவேந்திரா, மாதங்கி, நடன இயக்குநர் பிருந்தா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

விக்ரம் நடித்த படங்களிலிருந்து பாடல்காட்சிகளுக்கான நடனமும், இன்னிசைக் கச்சேரியும் மற்றும் பலகலைநிகழ்ச்சிகளும் கண்ணைக் கவரும் ஒளியமைப்பில் சிங்கப்பூர் எக்ஸ்போ மைதானத்தில் நடைபெறஇருக்கிறது.

இந்த நிகழ்ச்சியை பின்னர் ஜெயா டிவி ஒளிபரப்பும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil