விக்ரம் – பா.ரஞ்சித் இணையும் சியான் 61... ஷுட்டிங் எப்போ...வெளியான சூப்பர் தகவல்

சென்னை : நடிகர் விக்ரம் நடித்த படங்கள் வரிசையாக ரிலீசுக்கு தயாராக உள்ளன. சமீபத்தில் விக்ரம், தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடித்த மகான் படம் ஓடிடி.,யில் ரிலீசாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்த பொன்னியின் செல்வன், கோப்ரா என வரிசையாக படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. இவைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கட்ட பணிகளில் உள்ளன.

மகான் படம் ரிலீசான சமயத்திலேயே விக்ரம் விரைவில் டைரக்டர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார் என கூறப்பட்டது. தற்போது இந்த படம் உறுதியாகி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

சியான் 61 ஷுட்டிங் எப்போ

சியான் 61 ஷுட்டிங் எப்போ

பா.ரஞ்சித்- விக்ரம் இணையும் படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் ஷுட்டிங் ஜுலை 15 ம் தேதி துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா சமீபத்தில் அளித்த பேட்டியில் ஜுலை 15 ம் தேதி ஷுட்டிங் துவங்கப்பட உள்ளதை உறுதி செய்துள்ளார்.

8 ஆண்டுகள் காத்திருப்பு

8 ஆண்டுகள் காத்திருப்பு

மெட்ராஸ் படம் எடுத்துக் கொண்டிருக்கும் போதே, பா.ரஞ்சித் இந்த படத்தின் கதையை விக்ரமிடம் சொல்லி உள்ளார். இந்த கதை விக்ரமிற்கு பிடித்திருந்ததால் உடனடியாக ஓகே சொல்லி விட்டாராம். ஆனால் பா.ரஞ்சித் வேறு சில படங்களில் பிஸியாக இருந்ததால் இந்த படம் தொடர்ந்து தாமதமானதாம்.

தாமதத்திற்கு இதுதான் காரணமா

தாமதத்திற்கு இதுதான் காரணமா

மெட்ராஸ் படத்திற்கு பிறகு ரஜினிகாந்த்தின் கபாலி, காலா என அடுத்தடுத்து இரண்டு படங்களை இயக்கும் வாய்ப்பு பா.ரஞ்சித்திற்கு கிடைத்தது. அதற்கு பிறகு சார்பட்டா பரம்பரை படத்தை இயக்கும் வேலைகளில் பிஸியாகி விட்டார் பா.ரஞ்சித். இதனால் தான் பா.ரஞ்சித் - விக்ரம் இணையும் படம் தொடர்ந்து தாமதமானதாம்.

பட பிளான் இதுவா

பட பிளான் இதுவா

விக்ரம் - பா.ரஞ்சித் இணையும் படம் பீரியாடிக் படமாக எடுக்கப்பட உள்ளதாம். அதுவும் மிக பிரம்மாண்டமாக இந்த படத்தை எடுக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.

Recommended Video

Pudhupettai 2 எப்போ வரும்? KGF,RRR-ஐ மிஞ்சும் Vikram *Kollywood | Filmibeat Tamil
விக்ரமின் பிளான் என்ன

விக்ரமின் பிளான் என்ன

விக்ரம், விரைவில் மெளதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம் படத்தில் மீதமுள்ள காட்சிகளில் நடித்து முடிக்க போகிறாராம். துருவ நட்சத்திரம் படத்தின் வேலைகளை முடித்த பிறகே பா.ரஞ்சித் இயக்கும் சியான் 61 படத்தில் நடிக்க போகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X