»   »  இருமுகன்: வில்லன் ஆசை விக்ரமையும் விட்டு வைக்கலையே!

இருமுகன்: வில்லன் ஆசை விக்ரமையும் விட்டு வைக்கலையே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'இருமுகன்' படத்தில் நடிகர் விக்ரம் வில்லன் வேடத்தில் நடித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடித்து வரும் படம் 'இருமுகன்'.விக்ரம் இதில் இரட்டை வேடங்களில் நடித்து வருகிறார்.


அதில் ஒரு வேடத்தில் வில்லனாக விக்ரம் நடித்து வருவதாக தகவல்கள் அடிபடுகின்றன.


இருமுகன்

இருமுகன்

சமீபத்தில் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலடித்தது. இது தவிர விக்ரம் 2 வேடங்களில் நடிப்பது, நயன்தாரா-விக்ரம் இணையும் முதல் படம் என படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன.


நயன்தாரா

நயன்தாரா

விக்ரம் இரட்டை வேடங்களில் நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ''பில்லா' படத்தில் ஆக்ஷன் காட்சிகளில் ரசிகர்களைக் கவர்ந்த நயன்தாரா இப்படத்திலும் அதுபோல ஆக்ஷன் காட்சிகளில் நடித்து வருகிறாராம். விக்ரமிற்கு இணையாக நயன்தாரா கதாபாத்திரத்தையும் இயக்குநர் வடிவமைத்துள்ளதாக கூறுகின்றனர்.


வில்லன்

வில்லன்

இந்நிலையில் விக்ரம் இப்படத்தில் வில்லனாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தில் இதுவரை பார்க்காத மிரட்டலான ஒரு விக்ரமை பார்க்கலாம் என்று கூறுகின்றனர். இதுவரை விக்ரம் எந்தப் படத்திலும் வில்லனாக நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


சூர்யா

சூர்யா

ரஜினி, கமல், அஜீத், விஜய், சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் அனைவரும் வில்லனாக நடித்து விட்டனர். தற்போது 'இருமுகன்' படத்தின் மூலம் விக்ரமும் இந்த வில்லாதி வில்லன்கள் வரிசையில் இணையப் போகிறார்.


ஹீரோ விக்ரம் வில்லனாக மிரட்டுவாரா?English summary
Sources Said Vikram Play a Antagonist in Irumugn.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil