»   »  தமிழுக்கு வரும் வாரியர்... சூர்யா, கார்த்தியின் அப்பாவாக "பிதாமகன்" விக்ரம்?

தமிழுக்கு வரும் வாரியர்... சூர்யா, கார்த்தியின் அப்பாவாக "பிதாமகன்" விக்ரம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விக்ரம், சூர்யா மற்றும் கார்த்தி மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் பிரபல ஹாலிவுட் படமான வாரியரின் ரீமேக் எனக் கூறப்படுகிறது.

பாலாவின் இயக்கத்தில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்னர் விக்ரமும், சூர்யாவும் பிதாமகன் படத்தில் இணைந்து நடித்தனர். அந்தப் படம் சூப்பர் ஹிட் ஆனது. அதனைத் தொடர்ந்து இருவரும் சேர்ந்து நடிக்கவில்லை. அதேபோல், சகோதரர்களான சூர்யாவும், கார்த்தியும் இதுவரை சேர்ந்து நடித்ததில்லை.

இந்நிலையில், தற்போது இவர்கள் மூன்று பேரையும் சேர்த்து ஒரு படத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் உலா வருகிறது.

வாரியர்...

வாரியர்...

கடந்த 2011ம் ஆண்டு கெவின் ஓ கார்னர் இயக்கத்தில் வெளியான ஹாலிவுட் படம் வாரியர். பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகி வெற்றிநடை போட்ட இப்படத்தை ஹிந்தியில் பிரதர்ஸ் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.

ரிலீஸ்...

ரிலீஸ்...

அக்‌ஷய்குமார், சித்தார்த் மல்கோத்ரா, ஜாக்கி ஷெரீப் நடித்துள்ள இப்படத்தை கரண் மல்கோத்ரா இயக்கியுள்ளார். இப்படம் சுதந்திர தினத்தன்று ரிலீசாக உள்ளது.

தமிழில் ரீமேக்...

தமிழில் ரீமேக்...

இந்நிலையில், இதே படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாம். இந்தப் படத்தின் கதைப்படி மூன்று ஹீரோக்கள் உள்ளனர். எனவே, தமிழில் முன்னணி நாயகர்களான விக்ரம், சூர்யா மற்றும் கார்த்தியை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.

தெலுங்கில்...

தெலுங்கில்...

இதேபோல் தெலுங்கில் ராம் சரண் தேஜா, ராணா மற்றும் பிரபாஸ் ஆகியோரை நடிக்க வைக்க திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரம்மாண்ட படைப்பாகும்...

பிரம்மாண்ட படைப்பாகும்...

தமிழ் ரீமேக்கில் விக்ரம், சூர்யா மற்றும் கார்த்தி ஆகியோர் நடிக்க சம்மதிக்கும் பட்சத்தில் நிச்சயம் இந்தப் படம் மேலும் பிரம்மாண்டமாக உருமாறும் என்பதில் சந்தேகமில்லை. வசூலிலும் நிச்சயம் சாதனை படைக்கும்.

அப்பாவாக விக்ரம்...

அப்பாவாக விக்ரம்...

இந்தப் படத்தில் ஜாக்கி நடித்த வேடத்தில் விக்ரம் நடிப்பார் என்றும், அக்‌ஷய் மற்றும் சித்தார்த் நடித்த கதாபாத்திரங்களில் சூர்யா, கார்த்தி நடிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அப்படிப் பார்த்தால் சூர்யா, கார்த்திக்கு விக்ரம் அப்பாவாக நடிக்க வேண்டும். இதற்கு விக்ரம் சம்மதிப்பாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ரஜினிக்கு வில்லன்...

ரஜினிக்கு வில்லன்...

ஏற்கனவே ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் விக்ரம் தான் வில்லன் என தகவல்கள் வெளியானது. இந்நிலையில், சூர்யா மற்றும் கார்த்திக்கு அப்பாவாக விக்ரம் நடிக்கப் போகிறார் என்பது தான் கோலிவுட்டின் ஹாட் டாபிக்காக உள்ளது.

English summary
According to a report by IndiaGlitz, Vikram, Suriya and Karthi might act in the official remake of an English flick titled Warrior which has already been remade in Hindi under the name Brothers, starring Akshay Kumar, Sidharth Malhotra and Jackie Shroff.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil