»   »  சுந்தரபாண்டியன் இயக்குநருடன் கைகோர்க்கும் விக்ரம்!

சுந்தரபாண்டியன் இயக்குநருடன் கைகோர்க்கும் விக்ரம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சுந்தரபாண்டியன் இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரனை நினைவிருக்கிறதா? அந்தா பெரிய ஹிட்டுக்குப் பிறகு, உதயநிதியை வைத்து அவர் தந்த இது கதிர்வேலன் காதல் சுமாராகப் போக, கோடம்பாக்கம் அவரை கண்டுகொள்ளாதவர்கள் லிஸ்டில் தள்ளி விட்டது.

அடுத்து வாய்ப்புத் தருவதாக உறுதியளித்த உதயநிதியும், முகத்துக்கு நேரே வாய்ப்பு மறுத்துவிட, நொந்து போனார் பிரபாகரன்.

Vikram Prabhu joins with Sundarapandian director

இந்த நேரத்தில்தான் அவருக்கு விக்ரம் பிரபு கால்ஷீட் கிடைத்துள்ளது. இது என்ன மாயம் தோல்விக்குப் பிறகு விக்ரம் பிரபுவும் இப்போது ஒரு வெற்றிப் படம் தர வேண்டிய நெருக்கடியில் உள்ளார்.

இப்போது இருவரும் கைகோர்த்துள்ளனர். இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

விக்ரம் பிரபு நடித்துள்ள வாகா விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

English summary
Vikram Prabhu has revealed that he will be teaming up with Sundarapandian director SR Prabhakaran for a film.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil