»   »  எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் 'முடி சூடா மன்னனாக' மாறப் போகும் விக்ரம் பிரபு!

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் 'முடி சூடா மன்னனாக' மாறப் போகும் விக்ரம் பிரபு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்திற்கு முடி சூடா மன்னன் என்று பெயர் வைத்துள்ளனர்.

சுந்தரபாண்டியன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் எஸ்.ஆர்.பிரபாகரன். சுந்தரபாண்டியன் ஹிட்டுக்குப் பின் இவர் இயக்கத்தில் வெளியான இது கதிர்வேலன் காதல் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

Vikram Prabhu’s new film gets a title

இந்நிலையில் தன்னுடைய 3 வது படத்தை விக்ரம் பிரபுவை வைத்து பிரபாகரன் இயக்கவிருக்கிறார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு முடி சூடா மன்னன் என்று பெயர் சூட்டியுள்ளனர்.

இதில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன், ஐஸ்வர்யா தத்தா இருவரையும் படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளது. யுவன் ஷங்கர் ராஜாவை இப்படத்துக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திட வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகக் கூறுகின்றனர்.

மற்ற நடிக, நடிகையர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர்களைத் தேர்வு செய்தபின் இப்படம் குறித்த முழுமையான தகவல்களை, படக்குழுவினர் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்ரம் பிரபு தற்போது வீர சிவாஜி படத்தில் ஷாமிலியுடன் இனைந்து நடித்து வருகிறார். இவரின் மற்றொரு படமான வாகா விரைவில் வெளியாகவிருக்கிறது.

English summary
Vikram Prabhu’s new film Titled by Mudi Soodaa Mannan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil