Don't Miss!
- Sports
அடுத்த விக்கெட்டும் காலி.. ஆஸி,டெஸ்ட் தொடரில் இந்தியாவுக்கு பெரும் அடி.. என்ன செய்யப்போகிறார் ரோகித்
- Lifestyle
உங்களுக்கு இந்த கலர்ல சிறுநீர் வருதா? அது புற்றுநோயோட அறிகுறியா கூட இருக்கலாமாம்...ஜாக்கிரதை!
- News
செயற்கை வைரங்களை உருவாக்க புதிய திட்டம்.. சுங்க வரியும் குறைக்கப்படும்.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு
- Finance
இயற்கை விவசாயத்தினை மேம்படுத்த பல திட்டங்கள்.. விவசாய ஸ்டார்ட்அப்-களுக்கு சலுகை அளிக்க திட்டம்!
- Technology
மலிவு விலையில் 28 நாட்கள் வேலிடிட்டி உடன் புதிய திட்டத்தை அறிமுகம் செய்து அதிரடி காட்டிய Vodafone Idea!
- Automobiles
இந்த மாதிரி டபுள்-டக்கர் பேருந்து எல்லாம் வந்தா நம்ம சென்னை வேற லெவல் ஆயிடும்!! அதுவும் எலக்ட்ரிக் தரத்தில்...
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
விக்ரம் பிரபுவின் டாணாக்காரன் டீஸர் தேதி வெளியானது!
சென்னை : எஸ். ஜே. சூர்யா, பிரியா பவனி சங்கர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் படத்திற்கு பிறகு பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்திருக்கும் படம் டாணாக்காரன்.
விக்ரம் பிரபு இதில் சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இருந்த போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார்.
சென்ற மார்ச் மாதம் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இப்போது டீஸர் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜெயம்
ரவிக்கு
ஜோடியாகும்
பிரியா
பவானி
ஷங்கர்...
அடுத்தடுத்த
படங்களால்
ஹாப்பி

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ
2015ஆம் ஆண்டு நயன்தாராவின் அசத்தலான நடிப்பில் வெளியான மாயா படத்தை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தொடர்ந்து தரமான கதைகளைத் தயாரித்து வருகிறது. மாயா மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து லேகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் மற்றும் எஸ். ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் இணைந்து நடித்திருந்த மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களை தயாரித்திருந்தது.

டாணாக்காரன்
குறைந்த பட்ஜெட்டில் தரமான படங்களை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் புதுமுக இயக்குனர்களுக்கும் வாய்ப்புக்களை வழங்கி வரும் பொட்டன்ஷியல் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்போது அறிமுக இயக்குனர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள டாணாக்காரன் படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடித்துள்ளார். கைதி,சுல்தான், தீரன் அதிகாரம் ஒன்று, என்ஜிகே, அருவி உள்ளிட்ட படங்களை தயாரித்த ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது.

சுதந்திரத்திற்கு முந்தைய
கடந்த மார்ச் மாதம் டாணாக்காரன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. அதில் விக்ரம் பிரபு சுதந்திரத்திற்கு முந்தைய கட்டத்தில் இருந்த போலீஸ் அதிகாரி வேடத்தில் கையில் துப்பாக்கியை தாங்கிக்கொண்டு கம்பீரமாக நின்று கொண்டுள்ளார்.

ஜூலை 16ஆம் தேதி
இந்த நிலையில் இப்படத்தின் டீஸர் தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு டாணாக்காரன் டீஸர் வெளியாக இருப்பதாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை போலவே டீஸரும் மிக வித்தியாசமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எஸ். ஆர். பிரபுவின் சகோதரர்கள் எஸ் ஆர் பிரகாஷ் பாபு,பி கோபிநாத், தங்க பார்த்திபன் ஆர் ஆகியோர் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.