»   »  விக்ரம் பிரபு படத்துக்கு ரஜினி படத் தலைப்பு.. இளையராஜா இசை!

விக்ரம் பிரபு படத்துக்கு ரஜினி படத் தலைப்பு.. இளையராஜா இசை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்துக்கு ரஜினி நடித்த படமான தனிக்காட்டு ராஜா தலைப்பைச் சூட்டியுள்ளனர்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் ரஜினி நடித்த படம் தனிக்காட்டு ராஜா. டி ராமாநாயுடு தயாரிப்பில், ரஜினி, ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்தார். படம் பெரிய வெற்றியைப் பெற்றது.

Vikram Prabhu takes Rajini movie title

'வெள்ளக்கார துரை' படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்' படத்திலும், ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் ‘வாகா' படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப் படங்களை அடுத்து புதிதாக ஒரு படத்தில் விக்ரம் பிரபு நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை ‘மஞ்சப்பை' நவீன் ராகவன் இயக்கவிருக்கிறார். பொழுதுபோக்கு படமாக உருவாக இருக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கவுள்ளார்.

விரைவில் தொடங்கவுள்ள இப்படத்திற்கு ‘தனிகாட்டு ராஜா' என பெயர் வைத்துள்ளனர். 1982-ல் வெளியான அந்தப் படத்திற்கும் இளையராஜாதான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vikram prabhu's next movie has been titled as Thanikkattu Raja. Remember, this is a Rajini movie title that released in 1982.
Please Wait while comments are loading...