அடிதூள்... சியான் 61 லேட்டஸ்ட் அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்
சென்னை : நடிகர் விக்ரம் நடித்த படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன. பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீசாக உள்ளது. அதற்கு முன் கோப்ரா படம் ஆகஸ்ட் 28 ம் தேதி ரிலீசாக உள்ளது.
இந்த இரண்டு படங்களும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக உள்ளன. இந்நிலையில் விக்ரமின் அடுத்த படம் பற்றிய தகவலும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

விக்ரம், அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்க போகும் படத்தில் தான் நடிக்க போகிறார். இந்த படத்திற்கு சியான் 61 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே சொல்லப்பட்டுள்ளது.இந்த படத்தின் பூஜை சமீபத்தில் சென்னையில் நடந்தது.
தற்போது லேட்டஸ்ட் தகவலாக, சியான் 61 படத்தின் ஷுட்டிங் ஆகஸ்ட் மாத இறுதியில் துவங்க திட்டமிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிக பிரம்மாண்டமாக எடுக்கப்பட உள்ள இந்த படமும் பீரியாடிக் படம் தான் என்றும், 1800 களில் நடப்பது போன்ற ஒரு கதை என்றும் சொல்லப்படுகிறது.
அது மட்டுமல்ல சியான் 61 படத்தை 3டி.,யிலும் எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளாதாக சொல்லப்படுகிறது. இதனால் சியான் 61 படம் ரசிகர்களுக்கு மிகப் பெரிய விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான், ஸ்டூடியோ க்ரீன் பேனரில் தயாரிக்க உள்ளதாக ஜுன் மாத அறிவித்தார்.
சியான் 61 படம் மிக பிரம்மாண்டமாக, இந்தியிலும் படமாக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.விரைவில் படத்தில் இணையும் மற்ற நடிகர் - நடிகைகள் பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்து, நீண்ட நாட்களாக முடங்கிக் கிடக்கும் துருவ நட்சத்திரம் படத்தின் ஷுட்டிங் மீண்டும் துவங்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால் இந்த படத்தில் மீதமுள்ள காட்சிகளை நடித்து முடித்த பிறகு, பா.ரஞ்சித்தின் சியான் 61 படத்தின் ஷுட்டிங்கை துவக்க விக்ரம் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. துருவ நட்சத்திரம் படத்திற்காக தான் சியான் 61 ஷுட்டிங் ஆகஸ்ட் மாத இறுதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











