தாமதமாகும் கோப்ரா பாடல் ரிலீஸ்...ஏன், என்னாச்சு...குழப்பத்தில் ரசிகர்கள்
சென்னை : நடிகர் விக்ரம் நடித்த பல படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. பொன்னியின் செல்வன், கோப்ரா, துருவ நட்சத்திரம் என அனைத்தும் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களாக இருந்து வருகின்றன.
இதில் ரசிகர்கள் பல ஆண்டுகளாக அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது கோப்ரா, அஜய் ஞானமுத்து எழுதி, இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் படமான கோப்ரா படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரில் லலித்குமார் தயாரித்துள்ளார்.
விக்ரம் முதல் முறையாக அதிக கெட்அப்களில் நடித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 11 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் முவிஸ் வெளியிட உள்ளது. சேட்டிலைட் உரிமத்தை கலைஞர் டிவி வாங்கி உள்ளது.

அதிர அதிர வந்த அதீரா
கோப்ரா படத்தின் முலம் கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் நடிகராக, அதுவும் வில்லனாக அறிமுகமாக உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு தாமரை, பா.விஜய், விவேக் ஆகியோர் பாடல் எழுதி உள்ளனர். ஏப்ரல் 22 ம் தேதி கோப்ரா படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக பா.விஜய் வரிகளில் வகு மழன் பாடிய அதீரா பாடல் வெளியிடப்பட்டது.

செகண்ட் சிங்கிளிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்
இதைத் தொடர்ந்து இன்று செகண்ட் சிங்கிளாக உயிர் உருகுதே பாடல் இன்று மாலை சரியாக 6 மணிக்கு வெளியிடப்படும் என படக்குழு ஏற்கனவே அறிவித்தது. ஃபர்ஸ்ட் சிங்கிள் மாஸ் பாடலாக அமைந்துள்ள நிலையில், செகண்ட் சிங்கிள் காதல் பாடலாக வெளியிடப்பட உள்ளதால் ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் இருந்தனர்.

செகண்ட் சிங்கிள் வருவதில் தாமதம்
ஆனால் திடீரென கடைசி நிமிடத்தில் கோப்ரா பாடல் வெளியீடு கொஞ்சம் தாமதமாகிறது. இரவு 8 மணிக்கு பாடல் வெளியிடப்படும் என செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தனது ட்விட்டரில் அறிவித்துள்ளது. ஆனால் இந்த தாமதத்திற்கு என்ன காரணம் என சொல்லவில்லை. இதனால் ரசிகர்கள் அப்செட்டாகி உள்ளனர்.
Recommended Video

செம கடுப்பான ரசிகர்கள்
இரண்டு மணி நேரம் தாமதம் உங்களுக்கு கொஞ்சம் தாமதமா. ஃபர்ஸ்ட் சிங்கிளுக்கும் இப்படி தான் தாமதம் செய்தனர். இப்படியே தாமதம் செய்து கொண்டே போவதற்கு பேசாமல் படத்தையே நிறுத்தி விடலாம். மிக மோசமாக நடந்து கொள்கிறார்கள் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ. ஏன் இப்படி செய்கிறார்கள். ஒரு பாடல் குட சரியான நேரத்திற்கு வெளியிட முடியவில்லை என்றால் நீங்கள் எல்லாம் எதற்காக படம் தயாரிக்கிறீர்கள்.


Click it and Unblock the Notifications











