»   »  சீயான் விக்ரம் மகள் அக்‌ஷிதா திருமண நிச்சயதார்த்தம் - இயக்குநர் ஷங்கர் பங்கேற்பு

சீயான் விக்ரம் மகள் அக்‌ஷிதா திருமண நிச்சயதார்த்தம் - இயக்குநர் ஷங்கர் பங்கேற்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கும், கவின்கேர் குழும நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித்துக்கும் திருமண நிச்சயதார்த்தம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் மகளையே, கவின்கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதன் திருமணம் செய்துள்ளார். இவர்களின் மகன் மனு ரஞ்சித் மற்றும் விக்ரமின் மகள் அக்‌ஷிதாவுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது.

Vikram's daughter gets engaged to Karunanidhi's grandson

இதன்படி, சென்னையில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற நேற்று நடைபெற்ற நிச்சயதார்த்த விழாவில், இயக்குனர் ஷங்கர், உதயநிதி ஸ்டாலின் உள்பட ஏராளமான திரை உலக பிரபலங்கள் பங்கேற்றனர்.

Vikram's daughter gets engaged to Karunanidhi's grandson

நிச்சயதார்த்தம் தற்போது நடைபெற்றபோதிலும், திருமணம் 2017ம் ஆண்டில்தான் நடைபெற உள்ளது. எந்த நாளில் திருமணம் என்பது பற்றிய அறிவிப்பு இன்றும் சில தினங்களில் வெளியாகும். திருமணத்தில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரை உலக நட்சத்திரங்கள் ஏராளமானோர் பங்கேற்பார்கள் என்றும், இதற்காக அனைவரையும் அழைக்க விக்ரம் திட்டமிட்டுள்ளார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

English summary
Actor Vikram’s daughter Akshita got engaged to Manu Ranjith, the great grandson of DMK leader M Karunanidhi.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil