ஆர்யாவுக்கே அப்படியொரு படம்னா.. விக்ரமுக்கு சொல்லவா வேணும்.. பா. ரஞ்சித்தின் பலே பிளான்!

சென்னை: அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் பா. ரஞ்சித்.

நடிகர் கார்த்தியை வைத்து அவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், ரஜினிகாந்தின் இரு படங்களை இயக்கும் ஜாக்பாட் ஆஃபர் அவருக்கு கிடைத்தது.

ஆர்யாவை வைத்து பா. ரஞ்சித் இயக்கிய சார்பட்டா பரம்பரை திரைப்படத்தை பாராட்டாதவர்களே இல்லை என்கிற நிலையில், அடுத்ததாக விக்ரமுடன் இணைந்து பா. ரஞ்சித் பண்ண போகும் சம்பவம் குறித்த எக்ஸ்க்ளூசிவான தகவல்களை தயாரிப்பாளர் ஞானவேல் கூறியுள்ளார்.

விக்ரம் பெயர் மறைஞ்சிடுச்சா

விக்ரம் பெயர் மறைஞ்சிடுச்சா

கமல்ஹாசனின் விக்ரம் படம் பாக்ஸ் ஆபிஸில் வெறித்தனமாக ஓடி வரும் நிலையில், சியான் விக்ரமின் பெயர் மறைஞ்சிடுச்சா என்கிற கேள்வியும், அது தொடர்பான கேலி மீம்களும் சமூக வலைதளத்தில் வலம் வந்து கொண்டே இருக்கின்றன. இந்த ஆண்டு மகான் திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட்ட நிலையில், வசூல் ரீதியாக அந்த படம் என்ன சாதித்தது என்பது தெரியாமல் போய் விட்டது. கோப்ரா, பொன்னியின் செல்வன் வந்தால் மீண்டும் விக்ரம் யார் என்பது ரசிகர்களுக்கு புரியும் என சியான் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

உலகளவில் பிரபலம்

உலகளவில் பிரபலம்

இந்தியா மட்டுமின்றி இயக்குநர் பா. ரஞ்சித் உலகம் முழுவதும் தனது சார்பட்டா பரம்பரை படத்தின் மூலம் பிரபலமாகி விட்டார். சமீபத்தில் நடந்த கேன்ஸ் திரைப்பட விழாவிலும் கோட் சூட் மாட்டிக் கொண்டு கபாலி ரஜினி போல ரெட் கார்ப்பெட்டை கலக்கி இருந்தார். ஒரு பக்கம் நீலம் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரிப்பு பணிகளை கவனித்து வந்தாலும், இன்னொரு புறம் தனது படங்களை தரமானதாக கொடுக்க வேண்டும் என்கிற முயற்சியையும் தொடர்ந்து அவர் மேற்கொண்டு வருகிறார்.

ஆர்யாவுக்கே அப்படி

ஆர்யாவுக்கே அப்படி

கபிலன் கதாபாத்திரத்தில் முரட்டுத் தனமான உடம்புடன் சார்பட்டா பரம்பரை பட்த்தில் ந்டித்திருந்தார் நடிகர் ஆர்யா. பா. ரஞ்சித் இயக்கிய படங்களிலேயே சார்பட்டா பரம்பரை தான் பக்காவான படம் என பலரும் அவரை பாரட்டித் தள்ளினர். இந்நிலையில், ஆர்யாவை தொட்ர்ந்து சியான் விக்ரமுடன் இணைந்து படம் பண்ண போகிறார் என்கிற அறிவிப்பை பா. ரஞ்சித் சமீபத்தில் வெளியிட்ட உடனே இது சார்பட்டா பரம்பரையே தூக்கி சாப்பிட்டு விடுமே என ரசிகர்கள் கமெண்ட் போட்ட நிலையில், தற்போது அப்படியொரு கதையைத் தான் பா. ரஞ்சித் கையில் எடுத்துள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல் கூறியுள்ளார்.

Recommended Video

Independent படம் எடுக்கிறது எனக்கு ஒரு கனவு மாதிரி | Pa Ranjith | Sethumaan Press Meet #kollywood
18ம் நூற்றாண்டு கதை

18ம் நூற்றாண்டு கதை

மைதான் எனும் டைட்டிலில் பாலிவுட்டில் அஜய் தேவ்கன் படம் உருவாகி வரும் நிலையில், மைதானம் எனும் தலைப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் உருவாகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 18ம் நூற்றாண்டில் நடைபெறும் வரலாற்று சிறப்பு வாய்ந்த கதையாக உருவாகும் இந்த படம் 3டியில் வெளியிடவும் ரஞ்சித் திட்டமிட்டுள்ளார் உள்ளிட்ட தகவல்களும் ஏற்கனவே வெளியாகி உள்ளன. இதுவரை பார்க்காத அளவுக்கு தனது தோற்றத்தை மாற்றி நடிக்கப் போகிறார் விக்ரம் என்றும் படம் பான் இந்திய படமாக வெளியாகும் என்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா புதுத் தகவலை கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X