»   »  'ஐ' படம் எப்படி இருக்கு?: ரசிகர்களின் விமர்சனம்

'ஐ' படம் எப்படி இருக்கு?: ரசிகர்களின் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஐ படத்தை பார்த்த ரசிகர்கள் விக்ரமின் மிரட்டலான நடிப்பை பார்த்து அசந்து போயுள்ளனர்.

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் பல கெட்டப்புகளில் நடித்துள்ள ஐ படம் இன்று பிரமாண்டமாக ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை விக்ரம் தவிர்த்து ரசிகர்களும் பெரிதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.


இந்நிலையில் படத்தை பார்த்த ரசிகர்கள் விக்ரமின் நடிப்பை புகழ்ந்து தள்ளி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு,


விக்ரம்

விக்ரம்

ஐ படத்தில் சியான் தேசிய விருது கிடைக்கும் அளவுக்கு நடத்துள்ளார். ஷங்கரிடம் இருந்து அருமையான படம். காதல் காட்சிகள் மற்றும் நடிப்பு அருமை. ஐ அனைத்து சாதனைகளையும் முறியடிக்கப் போகிறது என்று தேன்ஸ் என்பவர் தெரிவித்துள்ளார்.


செம படம்

செம படம்

மலேசியாவில் ஐ செம படமாக உள்ளது. தியேட்டரில் ஒரே கைதட்டல் தான். சூப்பர் காமெடி, ஆக்ஷன் காட்சிகள். இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் என தேன்ஸ் மேலும் தெரிவித்துள்ளார்.


நடிப்பு

நடிப்பு

கமலுக்கு இணையான நடிகர் என்பதை இந்த படம் மூலம் விக்ரம் நிரூபித்துள்ளார். விக்ரமின் துணிச்சலான நடிப்பு உங்களின் இதயத்தை தொடுவதோடு வியக்க வைக்கும் என சுரரேந்தர் தெரிவித்துள்ளார்.


ஓகே

ஓகே

பழிவாங்கும் படத்தை எடுத்துள்ளார் ஷங்கர், இரண்டாம் பாதி நன்றாக உள்ளது. விக்ரமின் நடிப்பு ஓஹோ. ஏமி அழகாக உள்ளார். பிஜிஎம் சூப்பர். படம் ஓகே என்று ராகவா தெரிவித்துள்ளார்.


சர்பிரைஸ்

சர்பிரைஸ்

முதல் பாதி நன்றாக உள்ளது. கூனன் கதாபாத்திரத்தில் விக்ரம் ராக்ஸ். முதல் பாதியில் 3 பாடல்கள், 2 சண்டை காட்சிகள். ஆனால் திரைக்கதையை நம்மால் எளிதில் கணிக்க முடிகிறது. ட்விஸ்டோ, சர்பிரைஸோ இல்லை. படம் நீளமாக உள்ளது என கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார்.


இசை...

இசை...

இசையில் ஏ.ஆர்.ரஹ்மான் அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டதாக படம் பார்த்துக் கொண்டிருக்கும் நமது நிருபர் ஷங்கர் தொலைபேசியில் தெரிவித்தார். படம் 3 மணி நேரம் 10 நிமிடங்கள் ஓடுகிறதாம்.


அதிருப்தி

அதிருப்தி

பழிவாங்கும் காட்சிகள், சண்டைக் காட்சிகளை நீக்குங்கள். தியேட்டரில் ரசிகர்கள் அதிருப்தியில் கோஷமிட்டனர். நடிப்பில் தனக்கு நிகர் யாரும் இல்லை என விக்ரம் நிரூபித்துள்ளார். படத்தில் எனக்கு பிடித்து சந்தானத்தின் காமெடி. ஏமியின் திறமையை உள்ளேயும், வெளியேயும் ஷங்கர் முடிந்த அளவுக்கு பயன்படுத்தியுள்ளார் என ரமேஷ் என்பவர் தெரிவித்துள்ளார்.


English summary
Fans who have watched the movie 'I' could not stop wondering about Vikram's stunning performance.
Please Wait while comments are loading...