»   »  இன்று உலகம் முழுவதும் இருமுகன்... 1000 அரங்குகளில் வெளியானது!

இன்று உலகம் முழுவதும் இருமுகன்... 1000 அரங்குகளில் வெளியானது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம் - நயன்தாரா நடித்துள்ள இருமுகன் படம் இன்று உலகெங்கும் வெளியானது.

ஆரா சினிமாஸ் இந்தப் படத்தை ஏராளமான அரங்குகளில் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 90 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது.


Vikram's Iru Mugan releasing today

பத்து எண்றதுக்குள்ள படத்துக்குப் பிறகு விக்ரம் நடித்துள்ள படம் இருமுகன். ஆனந்த் சங்கர் இயக்கிய இந்தப் படத்தை ஷிபு தமீன்ஸ் பெரும் பொருட் செலவில் தயாரித்தார்.


இந்தப் படம் விக்ரம் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாகக் கருதப்பட்டது.


புலி படத்துக்குப் பிறகு ஷிபு தமீன்ஸ் தயாரித்துள்ள படம் என்பதால், அவருக்கும் இது முக்கியமான படம்.


உப்புக் கருவாடு, மசாலா படம், ராஜா மந்திரி, பிச்சைக்காரன் போன்ற படங்களை வெளியிட்டுள்ள ஆரா சினிமாஸ், தமிழில் வெளியிடும் முதல் பிரமாண்ட படம் இது.


எனவே பெரும் எதிர்ப்பார்ப்புக்கிடையில் இன்று வெளியாகியுள்ளது இருமுகன்.


தமிழகத்தில் மட்டும் 450 அரங்குகளில் இருமுகன் வெளியாகியுள்ளது. ரஜினியின் கபாலிக்குப் பிறகு, அதிக அரங்குகளில் வெளியாகியுள்ள படம் இருமுகன். அமெரிக்காவில் 90 அரங்குகளில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. பிரிட்டன், வளைகுடா நாடுகள், மலேசியா, சிங்கப்பூர், இலங்கையிலும் இருமுகன் வெளியாகியுள்ளது.

English summary
Vikram's much expected movie Irumugan is releasing worldwide today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil