»   »  விக்ரம்-நயன்தாராவின் 'இருமுகன்' ஜூலையில் ரிலீஸ்?

விக்ரம்-நயன்தாராவின் 'இருமுகன்' ஜூலையில் ரிலீஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை:விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் 'இருமுகன்' ஜூலை மாதம் வெளியாகலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

'மாட்டேன் மாட்டவே மாட்டேன்' என்று விக்ரமுடன் ஜோடி சேர அடம்பிடித்த நயன்தாரா, இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.


Vikram's Irumugan Released on July

மேலும் 'பில்லா' போல இதிலும் ஆக்ஷன் காட்சிகளில் நயன்தாரா நடித்திருப்பதாகக் கூறுகின்றனர்.


சமீபத்தில் விக்ரமின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலடித்தது. இது தவிர விக்ரம் 2 வேடங்களில் நடிப்பது, நயன்தாரா-விக்ரம் இணையும் முதல் படம் என படத்திற்கான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே உள்ளன.


இப்படத்தின் 60% படப்பிடிப்பு முடிவுற்ற நிலையில் மீதமுள்ள படப்பிடிப்பை லடாக், பாங்காக் பகுதிகளில் நடத்தவுள்ளனர்.


Vikram's Irumugan Released on July

இதற்காக 'இருமுகன்' படக்குழு விரைவில் அப்பகுதிகளுக்கு செல்லவிருக்கிறது. திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடிவடைந்தால் வரும் ஜூலை மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இப்படத்தில் இரட்டை வேடங்களில் விக்ரம் நடித்து வருகிறார்.அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் அகிலன் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Sources Said Vikram-Nayanthara's Irumugan May be Released on July Month.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil