சூறையாட்டம்... மகான் மாஸ் அப்டேட் வெளியிட்ட கார்த்திக் சுப்பராஜ்
சென்னை : கோலிவுட்டின் மிக பிரபலமான டாப் தந்தை -மகன் என்றால் அது விக்ரம், துருவ் தான். இவர்கள் முதல் முறையாக இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு மகான் என பெயரிடப்பட்டுள்ளதாக சமீபத்தில் அறிவித்தனர்.
முதலில், பல கைகளுடன் பைக்கில் கெத்தாக வரும் விக்ரம் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினர் ஆர்வத்தை தூண்டினர். அதைத் தொடர்ந்து, அனகோன்டா பாம்பு பின்னணியில் இருக்க சிக்ஸ் பேக்குடன் இருக்கும் துருவ்வின் போஸ்டரை வெளியிட்டு மாஸ் காட்டினர். கடந்த மாதம் மகான் படத்தின் ஒட்டுமொத்த ஷுட்டிங்கும் முடிந்ததாக அறிவித்தனர்.

லேட்டஸ்டாக விக்ரமின் 60 வது படமாக உருவாகி வரும் மகான் படத்தின் ஃபஸ்ட் சிங்கிள் வெளியிடும் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. இது பற்றி ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள கார்த்திக் சுப்பராஜ், முதல் பாடலான சூறையாட்டம் செப்டம்பர் 22 ம் தேதி வெளியிடப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கார்த்திக் சுப்பராஜின் இந்த பதிவை விக்ரம் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
முதலில் இந்த படத்திற்கு அனிருத் தான் இசை அமைப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் சில காரணங்களால் அனிருத் இந்த படத்தில் இருந்து விலகியதாகவும், அவருக்கு பதில் சந்தோஷ் நாராயணன் இசையமைக்க போவதாக அறிவித்தனர்.

விக்ரம் மற்றும் துருவ் ஆகியோரின் போஸ்டர் வெளியீட்டின் போது சந்தோஷ் நாராயணன் இசையமைத்த பேக்கிரவுண்ட் இசை விக்ரம் ரசிகர்களை கொண்டாட வைத்தது. இந்த இசையை விக்ரம் ரசிகர்கள் அதற்குள் ஹிட் ஆக்கி விட்டனர். இந்த படத்தில் துருவ் போலீஸ் ரோலிலும், விக்ரம் மாறுபட்ட வில்லன் ரோலிலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள மகான் படத்தில் சிம்ரன், வானி போஜன், பாபி சிம்ஹா, சனந்த் உள்ளிட்டோர் முக்கிய ரோல்களில் நடிக்கிறார்கள். இந்த ஆண்டு இறுதியில் பண்டிகை நாளில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. மகான் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











