»   »  ஓ... போடு ரேஞ்சுக்கு ஒரு பாட்டு... ஸ்கெட்ச் போடும் விக்ரம்

ஓ... போடு ரேஞ்சுக்கு ஒரு பாட்டு... ஸ்கெட்ச் போடும் விக்ரம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஐ படத்துக்கு பிறகு விக்ரமுக்கு வரிசையாக அடிகள்தான். இருமுகன் ஓரளவுக்கு வசூலைப் பார்த்தாலும் கூட இன்னும் இறங்கி அடித்தால்தான் பழைய ஃபார்முக்கு வர முடியும் என்று முடிவு எடுத்து இறங்கியிருக்கிறார்.

வாலு விஜய் சந்தர் இயக்கத்தில் நடிக்கும் கதை அப்படிபட்ட தர லோக்கல் படம் தானாம். வடசென்னை பின்புலத்தில் நடக்கும் கதைக்கு ஸ்கெட்ச் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Vikram's new wish to pull B,C audience

தூள், சாமி, ஜெமினி என்று தனக்கு இருந்த பி, சி செண்டர் ஆடியன்ஸை திரும்ப கவர்வதற்காக இந்த படத்தை தானே நேரடி கண்காணிப்பில் இருந்து கவனிக்கிறாராம் விக்ரம்.

அதில் முக்கியமாக 'ஓ... போடு' அளவுக்கு ஒரு பாடல் வேண்டுமென கேட்டிருக்கிறாராம். புதிய வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறார்கள் இசையமைப்பாளரும் பாடலாசிரியரும்.

அதுக்கு முன்னாடி பி, சி சென்டர்ல தியேட்டர் இருக்கான்னு செக் பண்ணிக்குங்க விக்ரம்!

English summary
Actor Vikram is insisting his new director and Music director to compose a song like O Podu.. in his forth coming movie to pull his B and C class audience.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil