»   »  விக்ரமின் அடுத்த படத்தின் தலைப்பு 'கருடா'

விக்ரமின் அடுத்த படத்தின் தலைப்பு 'கருடா'

Posted By:
Subscribe to Oneindia Tamil

விக்ரம் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு கருடா என்று சூட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை திரு இயக்குகிறார்.

கருடா என்பது பகவான் விஷ்ணுவின் பறவை வாகனம். கழுகை விடப் பெரிய பறவை.

Vikram's next movie titled Garuda

பொழுதுபோக்குப் படமாக உருவாகும் இந்தப் படத்தில் விக்ரம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். சிங்கம் புலி படத்தைத் தயாரித்த சில்வர் லைன் பிலிம் பேக்டரி இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இதற்கிடையே, ஆனந்த் சங்கர் இயக்கும் படத்திலும் விக்ரம் நடிக்கிறார் அல்லவா.. இந்தப் படத்தின் போட்டோ ஷூட் வரும் ஜனவரி 10 -ம் தேதி சென்னையில் நடக்கிறது.

அதில் கலந்து கொள்ளும் விக்ரம், ஒரே ஷெட்யூலில் அந்தப் படத்தை முடித்துவிட்டு, கருடா படப்பிடிப்பில் பங்கேற்கவிருக்கிறார்.

English summary
If sources are to be believed Garuda is likely to be the title of Vikram’s new film with director Thiru.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil