»   »  பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமாகும் விக்ரம் மகன்?

பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமாகும் விக்ரம் மகன்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இயக்குநர் பாரதிராஜா விரைவில் ஒரு புதிய படத்தைத் தொடங்கப் போவதாக கூறப்படுகிறது.

'குற்ற பரம்பரை' கதையை படமாக எடுப்பதில் பாலா-பாரதிராஜா இருவரும் நேரடியாக மோதிக் கொண்டனர். இதில் பாரதிராஜா தனது உதவி இயக்குநர்களுடன் இப்படத்திற்கு பூஜை போட்டு விரைவில் படப்பிடிப்பை தொடங்கப் போவதாக அறிவித்தார்.

இந்நிலையில் 'குற்ற பரம்பரை'யை தள்ளிவைத்து ஒரு காதல் கதையை பாரதிராஜா இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துருவ்

துருவ்

காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் விக்ரம் மகன் துருவ், இயக்குநர் வசந்த் மகன் இருவரையும் ஒருசேர அறிமுகப்படுத்த பாரதிராஜா திட்டமிட்டிருக்கிறாராம். இதற்காக விக்ரம் மற்றும் வசந்த் இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

டபுள் ஹீரோ

டபுள் ஹீரோ

இரண்டு ஹீரோக்களை மையமாகக்கொண்ட கதையென்பதால் புதிதாக இரண்டு ஹீரோக்களை அறிமுகம் செய்வது பாரதிராஜாவின் திட்டமாக உள்ளது. இப்படத்திற்கான நடிக, நடிகையரை தேர்வு செய்தபின் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள்.

அலைகள் ஓய்வதில்லை

அலைகள் ஓய்வதில்லை

காதலை மையப்படுத்தி உருவாகும் இப்படம் 'அலைகள் ஓய்வதில்லை' படத்தின் 2 வது பாகமா? என்று விசாரித்தால் இல்லை இது புத்தம்புதிய ஒரு காதல் கதை என்று கூறுகின்றனர்.

குற்ற பரம்பரை

குற்ற பரம்பரை

'குற்ற பரம்பரை' படத்திற்கு பூஜை போட்டு விரைவில் படத்தைத் துவங்கப் போவதாக கூறிய பாரதிராஜா தற்போது அப்படம் குறித்து எதுவும் பேசாமல் மவுனம் காத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் பாரதிராஜா இயக்கத்தில் தனது மகனை அறிமுகப்படுத்துவாரா? இல்லையா? என்பது இன்னும் ஒருசில மாதங்களில் தெரிந்து விடும்.

English summary
Sources said Director Bharathirajaa Introduced Vikram's Son in Tamil.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil