»   »  வருடக் கடைசியில் வெளியாகிறது 'இயக்குநர்' விக்ரமின் மழை, வெள்ளப் பாடல்!

வருடக் கடைசியில் வெளியாகிறது 'இயக்குநர்' விக்ரமின் மழை, வெள்ளப் பாடல்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது இயக்கத்தில் உருவாகி இருக்கும் சென்னை மழை, வெள்ள பாடலை இந்த வருடத்தின் கடைசி தினமான நாளை வெளியிடுகிறார் விக்ரம்.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகர்களில் ஒருவர் விக்ரம். தற்போது இவர் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் மாரீசன் மற்றும் திரு இயக்கத்தில் கருடா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

நல்ல நடிகர், பாடகர் என்று பெயரெடுத்த விக்ரம் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்திருக்கிறார். ஆமாம் சமீபத்தில் சென்னையை ஆட்டிப் படைத்த மழை, வெள்ளத்தை அடிப்படையாக்கொண்டு ஒரு வீடியோ பாடலை விக்ரம் இயக்கி இருக்கிறார்.

விக்ரமுடன் இணைந்து இந்தப் பாடலை மதன் கார்க்கி, கானா பாலா மற்றும் ரோகேஷ் ஆகியோர் எழுதி இருக்கின்றனர். சென்னை மக்கள் தங்கள் துயரங்களை எடுத்துக் கூறும் விதத்தில் இந்தப் பாடலை உருவாக்கி இருக்கும் விக்ரம் இடையிடையே இந்தப் பாடலின் இடையிலும் தோன்றுவாராம்.

மேலும் சென்னை மக்களுக்கு கைகொடுத்த தன்னார்வலர்களை பாராட்டும் விதமாகவும் இந்தப் பாடலை உருவாக்கி இருக்கும் விக்ரம் இந்தப் பாடலை சென்னை மக்களுக்கு அர்ப்பணம் செய்யவிருக்கிறார்.

English summary
Vikram now Turn as a Director in Spirit Of Chennai Rain Video Song. He is Deciding now Tomorrow Release for the Video Song.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil