»   »  விக்ரம், சமந்தா நடித்த '10 எண்றதுக்குள்ள' தெலுங்கில் ரிலீஸ்!

விக்ரம், சமந்தா நடித்த '10 எண்றதுக்குள்ள' தெலுங்கில் ரிலீஸ்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'கோலிசோடா' படத்தை அடுத்து விஜய் மில்டன் இயக்கிய படம் '10 எண்றதுக்குள்ள'. இந்தப் படத்தில் விக்ரம், சமந்தா இணைந்து நடித்தனர். இப்படத்தில் சமந்தா இரட்டை வேடங்களில் தோன்றினார்.

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்த இந்தப் படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிட்டது. இப்படம் எதிர்பார்த்த வசூலைப் பெறாமல் தோல்விப் படமாக அமைந்தது. இந்தப் படத்தை தற்போது தெலுங்கில் டப் செய்து வெளியிடும் வேலைகள் நடந்து வருகின்றன.

Vikram, Samantha starrer '10 endrathukulla' wil be released in Telugu

இந்தப் படத்தின் தெலுங்கு டப்பிங்கிற்கு '10' எனப் பெயர் வைத்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு தேதிகள் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அக்டோபர் மாதம் இப்படத்தை வெளியிடப்போகிறார்களாம்.

சமீபகாலமாக, விக்ரம் தெலுங்குப் படங்களில் நடிக்கவில்லை என்றபோதும், தனது ஆரம்ப காலங்களில் 4 நேரடி தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Vijay Milton directed the film '10 Endrathukulla ' starrer by Vikram and Samantha. This film is currently being dub in Telugu and works are going on.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil