மீண்டும் இணையும் விக்ரம் கூட்டணி...ஆனா ஒரு மெகா ட்விஸ்ட்

சென்னை : கமல் நடித்த விக்ரம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று, வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் விக்ரம் பட கூட்டணி மீண்டும் இணைய உள்ள புதிய படத்தின் அப்டேட், புது ட்விஸ்ட் உடன் வெளியாகி உள்ளது.

Recommended Video

Vikram பட வெற்றிக்காக நன்றி கூறி 5 மொழிகளில் பேசி வீடியோக்களை வெளியிட்டார் Kamal #Kollywood

டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள படம் விக்ரம். இந்த படத்தை கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருந்தது. இந்த படம் உலகம் முழுவதும் 150 கோடிக்கும் அதிகமான தொகையை வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கமலே வெளியிட்ட அப்டேட்

கமலே வெளியிட்ட அப்டேட்

இந்நிலையில் கமலை அடுத்து இயக்க போவது யார், லோகேஷ் கனகராஜ் யாருடைய படத்தை இயக்க போகிறார் என்ற கேள்விகள் கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றன. இதற்கு சமீபத்தில் கமலே பதிலும் கூறி விட்டார். தனது அடுத்த படம் பற்றிய அப்டேட்டை வெளியிட்டார். இதனால் அடுத்த மிரட்டலுக்கு கமல் தயாராகி விட்டதாக ரசிகர்கள் செம குஷியாகி விட்டனர்.

இவர் தான் டைரக்டரா

இவர் தான் டைரக்டரா

சமீபத்தில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கமல், தான் அடுத்ததாக மலையாள டைரக்டர் மகேஷ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக தெரிவித்தார். இவர் ஃபகத் ஃபாசிலை வைத்து மலையாளத்தில் டேக் ஆஃப், சி யு சூன், மாலிக் ஆகிய படங்களை இயக்கியவர். கமல் நடித்த விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களிலும் மகேஷ் நாராயணன் தான் எடிட்டராக பணியாற்றினார்.

கமலின் அடுத்த பட கதை

கமலின் அடுத்த பட கதை

இதில் லேட்டஸ்ட் தகவல் என்னவென்றால், கமல் - மகேஷ் நாராயணன் இணையும் படம் அரசியல் களத்தை மையமாக வைத்த படமாம். இந்த படத்தின் ஷுட்டிங் ஜுலை மாதம் துவங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. கமலின் அடுத்த படத்திலும் விக்ரம் பட கூட்டணியே தொடர உள்ளதாம். விக்ரம் படத்தில் நடித்த விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் இந்த படத்திலும் நடிக்க போகிறார்களாம். டைரக்டர் மட்டும் லோகேஷ் கனகராஜிற்கு பதில் மகேஷ் நாராயணன் மாற்றப்பட்டுள்ளாராம்.

ஆஹா...செம ட்விஸ்டா இருக்கே

ஆஹா...செம ட்விஸ்டா இருக்கே

இந்த படத்தையும் கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தான் தயாரிக்க போகிறதாம். மற்றொரு மாஸ் தகவல் என்னவென்றால் விக்ரம் படத்தில் கமலுடன் சூர்யா இணைந்து நடித்ததை போல், மகேஷ் நாராயணன் - கமல் இணையும் புதிய படத்தில் நடிகர் விக்ரம் முக்கிய ரோல் ஒன்றில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த அடுத்தடுத்த தகவல்களால், அடுத்த மெகா பிளாக்பஸ்டர் வெற்றிக்கு கமல் தயாராகி விட்டார் என ரசிகர்கள் இப்போதே கன்ஃபார்ம் செய்து விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X